புற்று நோய் சத்திர சிகிச்சையில் முதன் முறையாக வெற்றி

posted in: உலகம் | 0

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 78 வயது பெண் நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டார். அவருக்கு செயற்கை சுவாச குழாயை வெற்றிகரமாக பொருத்தி உள்ளனர் மருத்துவர்கள்.

இது போன்ற சத்திர சிகிச்சையை வெற்றிகரமாக செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. பாரிஸ் நகர் உள்ள அவிசென் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் குழு இந்த சிகிச்சை முறையை 2009 ம் ஆண்டு அக்டோபர் 28 ம் திகதி கண்டறிந்தது.

நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களையும் காப்பாற்ற முடியும் என்பது இதன் மூலம் உறுதியாகி உள்ளது. செயற்கை சுவாச குழாய் மாற்று சத்திர சிகிச்சை செய்யப்பட்ட இந்த பெண்மணி இப்போது நன்றாக உள்ளார்.

இது குறித்து மருத்துவர் இம்மானுவேல் மர்ட்டினோட் கூறுகையில்,”10 ஆண்டு ஆராய்ச்சியில் இந்த முறையை கண்டறிந்தோம். எனினும் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். உயிரி பொருட்களை கொண்டு இந்த குழாயை செய்துள்ளோம்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *