கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆப் இன்டஸ்ட்ரியல் டெக்னாலஜி இன்ஜினியரிங் என்ட்ரன்ஸ் (கே.ஐ.ஐ.டி.இ.இ.)
கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆப் இன்டஸ்ட்ரியல் டிரெயினிங் 1992ம் ஆண்டு துவக்கப்பட்டது.
தற்போது 15,000 மாணவர்கள் பயிலும் வகையில் உருவாகியுள்ளது. ஆண்டு தோறும் பி.டெக். ரெகுலர் மற்றம் பல பிரிவுகளின் கீழ் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இங்கு நுழைவுத் தேர்வுக் கட்டணமோ, விண்ணப்பக் கட்டணமோ எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கல்வி தகுதி : பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி அல்லது அதற்கு நிகரான தேர்வில் இயற்பியல், வேதியியல், கணிதம் பாடங்களில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்.
தேர்ந்தெடுக்கும் முறை : 120 அப்ஜெக்டிவ் கேள்விகள் கொண்ட இந்த தேர்வு 3 மணி நேரம் நடைபெறுகிறது. இயற்பியல் (40), வேதியியல் (40), கணிதம் (40) கேள்விகள் இருக்கும். நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்படுவார்கள்.
மேலும் தகவல்களுக்கு www.kiitee.ac.in இணைய தளத்தை பார்க்கவும்.
மஹாராஷ்டிரா காமன் என்ட்ரன்ஸ் டெஸ்ட் (எம்.எச்.டி. சி.இ.டி.)
இந்த தேர்வினை தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் நடத்துகிறது. இந்த தேர்வு மஹாராஷ்டிராவின் அனைத்து தனியார், அரசு உதவி பெறும், அரசு உதவி பெறாத பொறியியல் யூனிவர்சிட்டி, கல்லூரிகளிலும், பொறியியல் படிப்பிற்கான சேர்க்கைக்காக நடத்தப்படுகிறது.
இந்த நுழைவுத் தேர்வினை எழுதும் மாணவர்கள் 10 யூனிவர்சிட்டி மற்றம் அதன் கீழ் செயல்படும் கல்லூரிகளில் சேர்க்கை பெற இயலும். ரூ.700 செலுத்தி விண்ணப்பப் படிவத்தை பெறலாம்.
கல்வித் தகுதி : பிளஸ் 2 தேர்ச்சி அல்லது அதற்கு நிகரான தேர்வில் ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், கணிதப் பாடங்களில் குறைந்தது 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை : 3 மணி நேரம் நடத்தப்படும் தேர்வில் இரண்டு கேள்வித்தாள்கள் உண்டு. இரண்டுக்கும் தனித்தனியாக ஒன்றரை மணி நேரம் ஒதுக்கப்படுகிறது. முதல் தாளில் இயற்பியல், வேதியியல் (50+50 மதிப்பெண்), 2ம் தாளில் கணிதம் (100 மதிப்பெண்) வழங்கப்படுகிறது. ஆப்ஜெக்டிவ் வகையில் கேள்விகள் அமையும். நெகடிவ் மதிப்பெண்கள் இல்லை. டி.டி.இ. இணையத்தில் முடிவுகள் வெளியாகும். முடிவின் அடிப்படையில் கவுன்சிலிங்/இட ஒதுக்கீடு அமையும்.
மேலும் விவரங்கள் அறிய www.dte.org.in
எஸ்.ஆர்.எம். இன்ஜினியரிங் என்ட்ரன்ஸ் எக்ஸாம் (எஸ்.ஆர்.எம்.இ.இ.இ.)
எஸ்.ஆர்.எம். இன்ஜினியரிங் கல்லூரி சிறந்த கல்லூரிகளில் ஒன்றாகும். இங்கு பி.டெக். படிப்பிற்கான நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. விண்ணப்பப் படிவம் ரூ.750 ஆகும். சுமார் 5,000 இடங்களுக்கான சேர்க்கை ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது.
கல்வித் தகுதி : 12ம் வகுப்பு தேர்வில் இயற்பியல், வேதியியல், கணிதப் பாடங்களில் 60%மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை : இயற்பியல், வேதியியல், கணிதப் பாடங்களில் தலா 35 கேள்விகளும், அவற்றிற்கு தலா 105 மதிப்பெண்களும் உண்டு. உயிரியல் பாடத்தில் 50 கேள்விகள் கேட்கப்படும். அவற்றிற்கு 105 மதிப்பெண்கள். ஆப்ஜெக்டிவ் கேள்விகளைக் கொண்ட இந்த தேர்வை எழுத இரண்டரை மணி நேரம் கொடுக்கப்படுகிறது.
தகவல்களை அறிய www.srmuniv.ac.in
விஐடி இன்ஜினியரிங் என்ட்ரன்ஸ் எக்ஸாம் (வி.ஐ.டி.இ.இ.இ.)
வேலூர் இன்ஜினியரிங் கல்லூரியாக இருந்த விஐடி 2001ம் ஆண்டு யூனிவர்சிட்டியாக மாறியது. இந்த கல்லூரியின் நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பப் படிவம் ரூ.750க்கு கிடைக்கும்.
கல்வித்தகுதி : 60% மதிப்பெண்களுடன் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை : 12ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் பாடங்களில் இருந்து ஆப்ஜெக்டிவ் கேள்விகள் கேட்கப்படும். ஒரு மாணவர் கணிதம் அல்லது உயிரியல் அல்லது இரண்டும் என தேர்வு செய்து தேர்வெழுதலாம். இங்கு நெகடிவ் மதிப்பெண்கள் இல்லை. நுழைவுத் தேர்வில் எடுத்த மதிப்பெண்களைப் பொறுத்து கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்படுவர்.
மேலும் விவரங்களுக்கு www.vit.ac.in
மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் இக்கட்டுரை அமைந்திருக்கும் என்று நம்புகிறோம்.
Leave a Reply