திண்டுக்கல்: நத்தம், ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் தொகுதிகளில் சுயேச்சைகளாக வேட்புமனு செய்தவர்கள், முரசு சின்னத்தை ஒதுக்க வேண்டும் என கேட்டனர்.
நத்தத்தில் எதிர்ப்பின்றி ஒதுக்கப்பட்டது. வேடசந்தூர், ஒட்டன்சத்திரம் தொகுதிகளில் அ.தி.மு.க., சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
தே.மு.தி.க., சின்னத்தை சுயேச்சை வேட்பாளர்களுக்கு தந்தால் தங்கள் தொகுதிகளில் பாதிப்பு ஏற்படும் என்றனர். மாவட்ட தேர்தல் அதிகாரி வள்ளலாரிடமும் புகார் தெரிவித்தனர். தேர்தல் கமிஷன் கவனத்திற்கு இப்பிரச்னை உடனடியாக தெரிவிக்கப்பட்டது. தே.மு.தி.க., போட்டியிடாத தொகுதிகளில் “முரசு” சின்னத்தை சுயேச்சைகளுக்கு தரலாம் என தேர்தல் கமிஷன் தெளிவுபடுத்தியது. இதையடுத்து குலுக்கல் முறையில் இரு தொகுதிகளிலும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு முரசு சின்னம் ஒதுக்கப்பட்டது.
Leave a Reply