நாகப்பட்டினம்: நாகை, எஸ்.பி., அலுவலக லாக்கரில் கை வைத்த எஸ்.ஐ.,க்கு சிறை தண்டனை விதித்து, நாகை கோர்ட் உத்தரவிட்டது.
நாகை, எஸ்.பி., அலுவலக மாவட்ட குற்றப்பிரிவில் எஸ்.ஐ., யாக பணியாற்றியவர் பிரகாஷ்(50). சுனாமி நிவாரண நிதி வழங்கியதில் நடைபெற்ற முறைகேட்டில், பறிமுதல் செய்த எட்டு லட்ச ரூபாய் பணத்தை, குற்றப்பிரிவு போலீசார் அலுவலகத்தில் உள்ள லாக்கரில் பூட்டி வைத்தனர். கடந்த 2007ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி பணியில் இருந்த பிரகாஷ், லாக்கரில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு, தலைமறைவாகி விட்டார். இது குறித்த, புகாரின் பேரில் வெளிப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து, தலைமறைவாக இருந்த பிரகாஷை கைது செய்து, நாகை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி கோதண்டராஜ், அலுவலக பணத்தை கையாடல் செய்ததற்கு மூன்று ஆண்டுகள், லாக்கர் பூட்டை உடைத்து திருடியதற்காக மூன்று ஆண்டுகள் என பிரகாஷுக்கு, ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார். தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
Leave a Reply