மதுரை: மதுரையில் பத்தாண்டுகளாக பணிபுரிந்த
ரிக்கார்டு கிளார்க்குக்கு நான்குவாரங்களுக்குள் பதவிஉயர்வு வழங்கும்படி வணிகவரி துறை செயலாளருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
மதுரையை சேர்ந்த அப்துல் ரகுமான் ஏற்கனவே தாக்கல் செய்த ரிட் மனு: நான் வணிகவரி துறையில் பத்து ஆண்டுகளாக ரிக்கார்டு கிளார்க் ஆக பணிபுரிந்து வருகிறேன். எனக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை. 2000 முதல் இளநிலை உதவியாளராக கருதி, உதவியாளர் பதவி உயர்வு வழங்க உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. இவருக்கு பதவி உயர்வு வழங்க தனி நீதிபதி உத்தரவிட்டார். அதை எதிர்த்து வணிக வரி துறை சார்பில் ரிட் அப்பீல் மனு செய்யப்பட்டது. மனு நீதிபதிகள் என். பால்வசந்தகுமார், ஆர்.சுப்பையா பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், அப்துல் ரகுமானுக்கு 2000 முதல் இளநிலை உதவியாளராக கருதி, நான்கு வாரங்களுக்குள் பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
Leave a Reply