டெல்லி: விமானப் பெட்ரோல் விலை மீண்டும் ஏகத்துக்கும் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு கிலோ லிட்டருக்கு ரூ 3377.09 உயர்த்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் விமானப் பெட்ரோல் ஒரு கிலோ லிட்டர் ரூ 58310.45 ரூபாயாக விற்கப்படுகிறது. நேற்று நள்ளிரவு முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வருவதாக அரசுத் துறை நிறுவனம் இந்தியன் ஆயில் கார்ப் தெரிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் 2010-லிருந்து 11 வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதாவது 6 மாதங்களில் 11 முறை உயர்த்தியுள்ளனர்.
இந்த விலை உயர்வு உடனடியாக விமானக் கட்டணங்களை பெருமளவு உயர்த்தும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த தனியார் விமான நிறுவன அதிகாரி ஒருவர், “விமானக் கட்டணத்தின் பெரும்பகுதி இந்த எரிபொருளுக்கான கட்டணமாகவே வசூலிக்கப்படுகிறது. எனவே இப்போதைய விலை உயர்வு உடனடி பாதிப்பை ஏற்படுத்தும்”, என்றார்.
Leave a Reply