மத்திய அரசு கொண்டு வந்துள்ள வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் மசோதாவை(எப்.இ.ஐ), இந்திய மெடிக்கல் கவுன்சில் எதிர்க்கிறது.
வெளிநாட்டு கல்வி நிறுவனங்களை இந்தியாவில் இயங்க அனுமதித்து, அவற்றின் வருகையையும், இயக்கத்தையும் முறைப்படுத்தவே இந்த சட்ட மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மசோதாவைத்தான் எம்.சி.ஐ. எதிர்க்கிறது. பல முதன்மையான வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள், இந்தியாவில் தங்களின் வளாகங்களை உருவாக்குவதற்காக இந்திய கல்வி நிறுவனங்களுடன் கூட்டு சேர்வதற்கு இந்த மசோதா சிக்கலை ஏற்படுத்தும் என்று எம்.சி.ஐ. தெரிவிக்கிறது.
அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் உயர்கல்வி துறையில் கடுமையான பொருளாதார சிக்கல் இருப்பதால், அந்நாட்டை சேர்ந்த உயர்கல்வி நிறுவனங்கள் இந்திய கல்வி அமைப்பின் மீது விருப்பமாக இருக்கின்றன. மேலும் வெளிநாட்டு பல்கலைகள், தற்போதைக்கு இந்தியாவில் வளாகத்தை அமைக்கவோ அல்லது மற்ற இந்திய உயர்கல்வி நிறுவனங்களுடன் இணையவோ முடியாது. மேலும் வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் வழங்க விரும்பும் மருத்துவ பட்டப் படிப்புகள், இந்திய மருத்துவ கவுன்சிலால் தீவிரமாக ஆராயப்பட வேண்டும் என்று கவுன்சில் கூறுகிறது.
தற்போது அந்த மசோதா தொடர்பாக, மனிதவளத் துறை சம்பந்தமான நாடாளுமன்ற நிலைக்குழு தனது அறிக்கையை இறுதிசெய்து விட்டது. யு.ஜி.சி. இந்த மசோதாவை ஆதரிக்கிறது. அந்த வகையில் எம்.சி.ஐ. இது தொடர்பாக சமாதானம் செய்யப்பட்டு விடும் என்றே நம்பப்படுகிறது.
Leave a Reply