வாஷிங்டன்: அமெரிக்காவில் தொடரப்பட்ட வழக்கை முடிவுக்குக் கொண்டுவர 10 மில்லியன் டாலர் செலுத்த ஒப்புக் கொண்டுள்ளது சத்யம் கம்ப்யூட்டர் சர்வீஸஸ் (மகிந்திரா சத்யம்) நிறுவனம்.
அமெரிக்கப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமான சத்யம், தனது வருமானத்தை கடந்த ஆண்டுகளில் (ராமலிங்க ராஜு நிர்வாகத்தில்) உயர்த்திக் காட்டி முதலீட்டாளர்களை ஏமாற்றிவிட்டதாக, அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இதற்காக போலி ரசீதுகள், வங்கிக் கணக்குகள் போன்றவற்றை தயாரித்து முதலீட்டாளர்களை ஏமாற்றியுள்ளனர் சத்யம் நிறுவனத்தின் முன்னாள் உயர் அதிகாரிகள். ஆண்டுக்கு 1பில்லியன் டாலர் வரை வருமானத்தை உயர்த்திக் காட்டியதாக இந்த வழக்கில் சத்யம் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கை முடிவுக்குக் கொண்டுவர விரும்பிய, நிறுவனத்தின் இப்போதைய உரிமையாளர்கள், அந்நாட்டின் பங்குகள் மற்றும் பரிமாற்ற ஆணையத்துக்கு 10 மில்லியன் டாலர் அபராதமாக செலுத்த ஒப்புக் கொண்டுள்ளனர்.
Leave a Reply