மத்திய மனிதவள அமைச்சக கமிட்டியின் பரிந்துரைகள், ஐ.ஐ.டி -களை தனியார்மயமாக்கிவிடும் என்று ஐ.ஐ.எம். ஆசிரியர் வட்டாரம் தெரிவித்துள்ளது.
மத்திய மனிதவள அமைச்சகத்தால், ஆர்.சி.பார்கவா தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டியானது, “தனிநபர்கள் மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள் ஐ.ஐ.எம் -களுக்கு நன்கொடைகள் வழங்குவதன் மூலம், ஐ.ஐ.எம். நிர்வாக குழுவில் இடம் பெறலாம். அதன் அடிப்படையில் ரூ.20 கோடி நன்கொடை அளித்து, தொழில் நிறுவனங்கள், 5 வருடங்கள் நிர்வாக குழுவில் இடம் பெறலாம் மற்றும் தனிநபர் அல்லது பழைய மாணவர் ரூ.5 கோடி அளித்து நிர்வாக குழுவில் இடம்பெறலாம்” என்றும் பரிந்துரை செய்தது.
ஆனால் இத்தகைய பரிந்துரைகள் ஐ.ஐ.எம் -களை தனியார்மயமாக்கிவிடும் என்று கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த பரிந்துரைகள், ஐ.ஐ.எம் -களை தனியார் மயப்படுத்தாது என்று கபில்சிபல் கூறிய 48 மணி நேரத்திற்குள் ஐ.ஐ.எம்-கல்கத்தா, தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இந்த பரிந்துரைகளுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளது.
மேலும், இந்த பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டால், தனியார் கரங்களில் தாங்கள் விழ நேரிடும் என்று ஐ.ஐ.எம் -கள் கருத்து தெரிவித்துள்ளன.
Leave a Reply