மதுரை:”மதுரையில் பி.எஸ்.என்.எல்., போன் இணைப்பு மூலம் ‘டிவி’ சேனல்களை பார்க்கும் வசதிகள் விரைவில் ஏற்படுத்தப்படும்”, என பி.எல்.என்.எல்., முதன்மை பொது மேலாளர் முகமது அஸ்ரப் கான் தெரிவித்தார்.
மதுரையில் பி.எஸ்.என்.எல்., மற்றும் தொழில் வர்த்தக சங்கம் சார்பில் நடந்த வாடிக்கையாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது:பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்களுக்கு புதுமையான திட்டங்களை தொடர்ந்து வழங்கி வருகிறது. மொபைல் இணைப்புகளில் சி.யு.ஜி., வசதி உள்ளதை போன்று, போன்களிலும் சி.யு.ஜி., வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன. குறைந்த செலவில் வீடியோ கான்பரன்சிங், ஆடியோ கான்பரன்சிங் வசதிகளை வாடிக்கையாளர்கள் பெறலாம். 3ஜி சேவை மதுரை, திண்டுக்கல், தேனி, கொடைக்கானல் என முக்கிய இடங்களில் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் அனைத்து ஓட்டுச்சாவடிகளும் பி.எஸ்.என்.எல்., இணைப்பு மூலம் வாக்குச்சாவடிகளை சென்னையில் இருந்து கண்காணிக்கும் அளவிற்கு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது.
சென்னை, கோவையில் பி.எஸ்.என்.எல்., இணைப்பு மூலம் ‘டிவி’ சேனல்களில் நிகழ்ச்சிகளை பார்க்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன. அது போல் மதுரையில் விரைவில் ஏற்படுத்தப்படும். பி.எஸ்.எல்.எல்., கட்டணம் செலுத்துவோருக்கு இ-மெயில் முகவரிக்கு பில் அனுப்பும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது, என்றார்.
Leave a Reply