இந்திய ஆசிரியர்களுக்கு சிங்கப்பூரில் கிராக்கி

posted in: உலகம் | 0

சிங்கப்பூர்: இந்திய ஆசிரியர்களின் தேவைப்பாடு சிங்கப்பூரில் அதிகமாக தேவைப்படுவதாக அந்நாட்டின் கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இதன் தேவைப்பாடு இந்திய மொழிகள் மட்டுமல்லாது பிற பாடத்திட்டங்களுக்குமான தேவையும் காரணமாகும் என சிங்கப்பூர் கல்வி நிறுவனத்தை சேர்ந்த பெலிண்டா சார்லஸ் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது: சிங்கப்பூர்கல்வி நிறுவனம் மற்றும் கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்ட அகாடமி ஆப் புரொபசனல் எக்சலன்ஸ் அமைப்பும் இணைந்து திறமைவாய்ந்த ஆசிரியர்களை சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதன்படி கடந்த 2006-ல் எட்டு ஆசிரியர்கள், 2007 முதல் 2009 வரை 30 ஆசிரியர்கள் என சிங்கப்பூரில் பணியாற்றி வந்துள்ளனர். கடந்த 2010-ம் ஆண்டில் இந்திய ஆசிரியர்களின் எண்ணிக்கை 25 குறைந்ததுள்ளது. பெரும்பாலான இந்திய ஆசிரியர்கள் கொல்கத்தாவை சேர்ந்தவர்களாவர்.சிங்கப்பூரில் பொதுவாக பொருளாதாரம் போன்ற படிப்புகளை சொல்லித்தருவதில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *