ஜகார்த்தா: இந்தோனேசியாவின் மத்திய ஜாவாவில் உள்ள கிலகாப் என்ற இடத்தில் சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்தோனேசிய பூகம்பவியல் கழகம், சுனாமி எச்சரிக்கையை விடுத்தது.
இந்த பூகம்பத்தின் அளவு 7.1 ரிக்டர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜாவா தீவில், கிலகாப் என்ற இடத்திற்கு அருகே கடலில் 10 கிலோமீட்டர் ஆழத்திற்கு இதன் மையப்புள்ளி இருந்தது.
மிகவும் சக்தி வாய்ந்த பூகம்பம் என்பதால் சுனாமி அலைகள் எழ வாய்ப்பிருப்பதாக பூகம்பவியல் கழகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. இருப்பினும் பசிபிக் பிராந்திய சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கை எதையும் விடுவிக்கவில்லை. மாறாக, சிறிய அளவிலான சுனாமி அலைகள் எழ வாய்ப்பிருப்பதாக அது தெரிவித்துள்ளது.
பூகம்பத்தைத் தொடர்ந்து இந்தோனேசிய மக்கள் பீதியைடந்தனர். பலர் வீடுகளை விட்டு வெளியேறினர். பலர் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர்.
Leave a Reply