கொச்சி: ஐ.பி.எல்., லீக் போட்டியில் வேகத்தில் மிரட்டிய இஷாந்த் சர்மா 5 விக்கெட் வீழ்த்தி கைகொடுக்க, டெக்கான் சார்ஜர்ஸ் அணி, கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணியை 55 ரன்கள் வித்தியாசத்தில் சூப்பராக வீழ்த்தியது.
இந்தியாவில் நான்காவது ஐ.பி.எல்., “டுவென்டி-20′ தொடர் நடக்கிறது. நேற்று கொச்சியில் நடந்த 32வது லீக் போட்டியில் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா, டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் மோதின. “டாஸ்’ வென்ற கொச்சி அணி கேப்டன் ஜெயவர்தனா “பீல்டிங்’ தேர்வு செய்தார்.
டெக்கான் அணி துவக்கத்தில் ஆர்.பி.சிங் “வேகத்தில்’ அதிர்ந்தது. இவரது பந்துவீச்சில் சோகல்(1), தவான்(4) அவுட்டாகினர். வினய் குமார் பந்தில் சிப்லி(4) காலியாக, 5.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 20 ரன்கள் எடுத்து தத்தளித்தது.
சங்ககரா அரைசதம்:
பின் கேப்டன் சங்ககரா, கேமரான் ஒயிட் இணைந்து அணியை மீட்டனர். சங்ககரா 5 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்ரீசாந்த் பந்தில் போல்டானார். ஆனால், அது “நோ-பாலாக’ அறிவிக்கப்பட, கண்டம் தப்பினார். முதலில் அடக்கி வாசித்த சங்ககரா போகப் போக அதிரடியாக ரன் சேர்த்தார். பெரேரா, வினய் குமார் ஓவர்களில் வரிசையாக பவுண்டரி அடித்தார். ரவிந்திர ஜடேஜா சுழலில் ஒயிட் ஒரு சிக்சர் அடிக்க, ஸ்கோர் ஓரளவுக்கு உயர்ந்தது. ஸ்ரீசாந்த் வீசிய போட்டியின் 16வது ஓவரில் சங்ககரா இரண்டு பவுண்டரி அடித்தார். ஒயிட் தன் பங்குக்கு ஒரு பவுண்டரி அடிக்க, மொத்தம் 15 ரன்கள் எடுக்கப்பட்டன. நான்காவது விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்த்த நிலையில், வினய் குமார் பந்தில் ஒயிட்(31) அவுட்டானார். அடுத்த பந்தில் அரைசதம் கடந்த சங்ககராவும்(65) வெளியேறினார். டேனியல் கிறிஸ்டியன்(9) ஏமாற்றினார். டெக்கான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 129 ரன்கள் மட்டும் எடுத்தது.
கொச்சி சார்பில் வினய் குமார் 3, ஆர்.பி.சிங் 2 விக்கெட் வீழ்த்தினர்.
இஷாந்த் மிரட்டல்:
சுலப இலக்கை விரட்டிய கொச்சி அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி. ஸ்டைன் பந்தில் பிரண்டன் மெக்கலம் “டக்’ அவுட்டானார். இதற்கு பின் இஷாந்த் சர்மா போட்டுத் தாக்கினார். இவரது வேகத்தில் விக்கெட்டுகள் மடமடவென சரிந்தன. இவரது முதல் ஓவரில் பார்த்திவ்(0), கோமஸ்(0), ஹாட்ஜ்(0) நடையை கட்டினர். அடுத்த ஓவரில் ஜாதவ்(0), கேப்டன் ஜெயவர்தனாவை(4) வெளியேற்றிய இஷாந்த், 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இதையடுத்து கொச்சி அணி 4 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 11 ரன்கள் எடுத்து தவித்தது.
பின் ரவிந்திர ஜடேஜா, திசரா பெரேரா இணைந்து போராடினர். கோனி பந்தில் பெரேரா(22) காலியானார். மிஸ்ரா சுழலில் ஜடேஜா(23) சிக்கினார். மீண்டும் பந்துவீச வந்த ஸ்டைன் வேகத்தில் வினய் குமார்(18) போல்டானார். கொச்சி அணி 16.3 ஓவரில் 74 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வி அடைந்தது.
டெக்கான் சார்பில் இஷாந்த் 5, ஸ்டைன் 3 விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருதை இஷாந்த் வென்றார்.
7வது பவுலர்
ஐ.பி.எல்., வரலாற்றில் ஒரு போட்டியில் 5 விக்கெட் வீழ்த்தும் 7வது பவுலர் என்ற பெருமை பெற்றார் இஷாந்த் சர்மா. இத்தொடரில் மும்பை அணி வீரர்களான மலிங்கா, ஹர்பஜனை தொடர்ந்து 3வது வீரராகிறார். தவிர, ஐ.பி.எல்., அரங்கில் மூன்றாவது சிறந்த பந்துவீச்சையும் இஷாந்த்(3-0-12-5)பதிவு செய்தார். முதல் இரு இடங்களில் தன்விர்(ராஜஸ்தான் அணி, 4-0-14-6, 2008), கும்ளே(பெங்களூரு அணி, 3.1-1-5-5, 2009) உள்ளனர்.
———
3வது குறைந்த ஸ்கோர்
நேற்று 74 ரன்களுக்கு சுருண்ட கொச்சி அணி, ஐ.பி.எல்., வரலாற்றில் மூன்றாவது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. முதல் இரு இடங்களில் ராஜஸ்தான்(58 ரன், எதிர் பெங்களூரு அணி, 2009), கோல்கட்டா(67 ரன், எதிர் மும்பை, 2008) அணிகள் உள்ளன.
ஸ்கோர் போர்டு
டெக்கான் சார்ஜர்ஸ்
சோகல் எல்.பி.டபிள்யு.,(ப)ஆர்.பி.சிங் 1(4)
தவான்(கே)கோமஸ்(ப)ஆர்.பி.சிங் 4(9)
சிப்லி(கே)ஸ்ரீசாந்த்(ப)வினய் 4(10)
சங்ககரா(கே)பார்த்திவ்(ப)வினய் 65(47)
ஒயிட்(கே)ஜெயவர்தனா(ப)வினய் 31(34)
கிறிஸ்டியன்(ப)பெரேரா 9(11)
ரவி தேஜா-அவுட் இல்லை- 8(5)
மிஸ்ரா-ரன் அவுட்-(பார்த்திவ்) 0(1)
கோனி-அவுட் இல்லை- 0(1)
உதிரிகள் 7
மொத்தம்(20 ஓவரில் 7 விக்.,) 129
விக்கெட் வீழ்ச்சி: 1-3(சோகல்), 2-6(தவான்), 3-20(சிப்லி), 4-110(ஒயிட்), 5-110(சங்ககரா), 6-127(கிறிஸ்டியன்), 7-127(மிஸ்ரா).
பந்துவீச்சு: ஆர்.பி.சிங் 4-0-21-2, ஸ்ரீசாந்த் 4-1-22-0, வினய் 4-0-25-3, பெரேரா 4-0-30-1, கோமஸ் 1-0-4-0, ஜடேஜா 3-0-25-0.
கொச்சி டஸ்கர்ஸ் கேரளா
பிரண்டன்(கே)சங்ககரா(ப)ஸ்டைன் 0(4)
ஜெயவர்தனா(கே)சங்ககரா(ப)இஷாந்த் 4(8)
பார்த்திவ்(கே)சங்ககரா(ப)இஷாந்த் 0(3)
கோமஸ்(ப)இஷாந்த் 0(1)
ஹாட்ஜ்(ப)இஷாந்த் 0(2)
ஜாதவ் எல்.பி.டபிள்யு.,(ப)இஷாந்த் 0(2)
ஜடேஜா(கே)கிறிஸ்டியன்(ப)மிஸ்ரா 23(35)
பெரேரா(கே)ஒயிட்(ப)கோனி 22(23)
வினய் (ப)ஸ்டைன் 18(19)
ஸ்ரீசாந்த்-அவுட் இல்லை- 0(1)
ஆர்.பி.சிங்(ப)ஸ்டைன் 0(1)
உதிரிகள் 7
மொத்தம்(16.3 ஓவரில் ஆல் அவுட்) 74
விக்கெட் வீழ்ச்சி: 1-0(பிரண்டன்), 2-1(பார்த்திவ்), 3-1(கோமஸ்), 4-2(ஹாட்ஜ்), 5-6(ஜாதவ்), 6-11(ஜெயவர்தனா), 7-47(பெரேரா), 8-73(ஜடேஜா), 9-74(வினய்),10-74(ஆர்.பி.சிங்).
பந்துவீச்சு: ஸ்டைன் 3.3-1-16-3, இஷாந்த் 3-0-12-5, கிறிஸ்டியன் 3-0-12-0, கோனி 3-0-19-1, மிஸ்ரா 4-0-12-1.
Leave a Reply