இஸ்லாமாபாத்: உலகக் கோப்பையை வென்றெடுத்த இந்திய கிரிக்கெட் அணியைப் பாராட்டுவதாக பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
கிலானி அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பையை வென்றதற்காக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்காலத்தில் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் கிரிக்கெட் அணிகளும் போட்டிகளில் பங்கேற்கும் என்ற நம்பிக்கையும் எனக்கு அதிகரித்துள்ளது.
உலககக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி, இரு நாடுகளையும் மேலும் நெருங்கி வரச் செய்துள்ளது. மேலும், இந்த இரு நாடுகளின் மூலம் கிரிக்கெட் போட்டி உலகெங்கும் மேலும் பிரபலமாகியுள்ளது.
தற்போது இரு நாடுகளும் ஒரு போட்டியில் மோதியுள்ள நிலையில் எதிர்காலத்தில் மேலும் பல போட்டிகளில் இரு அணிகளும் கலந்து கொள்ளும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அமைதிக்காகவும், நட்புக்காகவும், கிரிக்கெட் விளையாட்டை இரு நாடுகளும் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளும் என்றும் நம்புகிறேன் என்று கூறியுள்ளார் கிலானி.
Leave a Reply