சென்னை: மாணவர்கள் மற்றும் பணி புரிபவர்கள் பயன்பெறும் வகையில் ஐ.இ.எல்.டி.எஸ். ஆயத்த படிப்பை பிரிட்டிஷ் கவுன்சில் தொடங்கியுள்ளது.
ஐ.இ.எல்.டி.எஸ். தேர்வுக்கான நுட்பங்கள் மற்றும் அதிக மதிப்பெண் பெறுவதற்கான வழிமுறைகள் ஆகியவற்றை கற்றுத்தரும் நோக்கத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த படிப்பு, வரும் மே மாதம் 27 ம் தேதி தொடங்க உள்ளது.
இத்தகைய ஒரு புதிய படிப்பை பிரிட்டிஷ் கவுன்சில் தொடங்கியுள்ளதன் மூலம், ஐ.இ.எல்.டி.எஸ். தேர்வுக்கான அனைத்து ஆலோசனை மற்றும் வழிமுறைகளையும் ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ள வழி ஏற்பட்டுள்ளது. மேலும் விருப்பத்திற்கு ஏற்ப தேர்வெழுதவும் வழி ஏற்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில், உலகின் மிகப்பெரிய ஐ.இ.எல்.டி.எஸ். சந்தையாக இந்தியா திகழ்கிறது. நாட்டின் 39 மையங்களில் ஐ.இ.எல்.டி.எஸ். தேர்வு நடத்தப்படுகிறது. இன்றைய நிலையில், இதுபோன்ற ஆயத்த படிப்புகளுக்கான தேவை அதிகமாக உள்ளது என்று பிரிட்டிஷ் கவுன்சில் வாட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பொது ஆங்கிலம், வணிக ஆங்கிலம், ஸ்போக்கன் இங்க்லீஷ், எழுத்து திறன்கள் போன்ற பலவித படிப்புகளை, பல வயதினருக்கும் ஏற்ற வகையில் பிரிட்டிஷ் கவுன்சில் வழங்குகிறது. இதைப்பற்றிய முழு விவரம் அறிந்துகொள்ள http://www.britishcouncil.org/india-exams-ielts-home.htm என்ற இணையதளம் செல்லவும்.
Leave a Reply