கடன் பெற்ற மாணவர்களின் கல்வித்தரம் சரிந்துள்ளதால், வங்கி நிர்வாகங்கள் அதிர்ச்சியில் உள்ளன.
உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்க வேண்டும் என, வங்கி நிர்வாகங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், வழங்க வேண்டிய கல்விக்கடன் அளவு குறித்து நிர்ணயமும் செய்கிறது.
இலக்கை எட்டும் நோக்கத்தில், வங்கி நிர்வாகங்களுக்கு கடன் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு விடுகிறது. முதல் ஆண்டில் கடன் பெற்ற மாணவர்கள் அடுத்த ஆண்டிற்கு கடன் பெறும் முன், முந்தைய ஆண்டில் பெற்ற மார்க் பட்டியலை வங்கி நிர்வாகங்கள் கேட்டு வாங்குகின்றன. இந்த பட்டியலை பார்த்த பல வங்கி நிர்வாகங்கள் அதிர்ச்சியில் உள்ளன. கடன் பெற்ற மாணவர்களில் பெரும்பாலானோர் பெயில் மார்க் வாங்கி உள்ளனர். இதை பெற்றோரும் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.
அதிக மார்க் வாங்கியவர்களுக்கே தனியார் நிறுவனங்கள் வேலை வழங்க முன்வருகின்றன. குறைந்த மார்க் வாங்கியவர்கள், மீண்டும் தேர்வு எழுதி, வெற்றி பெற்று அதன்பின், வேலைக்கு சேர்ந்து, கடனை செலுத்த வேண்டும். எனவே, இந்த கடன் தொகை வசூலிப்பதில் சிரமம் ஏற்படும்.
இதனால், வங்கி நிர்வாகங்களுக்கு கடன் நிலுவை அதிகரித்து பெரும் பாதிப்பு ஏற்படும் என, அச்சமடைந்துள்ளன. கல்விக் கடன் பெற்ற மாணவர்கள் மார்க் குறைந்தால் கடன் நிறுத்தப்படும் வகையில் திட்டங்களில் சிறிய அளவில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என, அரசை வலியுறுத்தி வருகின்றன.
Leave a Reply