கதிர்வீச்சு பொருட்களை வடிகட்டஉருக்கு சுவர் கட்ட ஜப்பான் திட்டம்

posted in: உலகம் | 0

டோக்கியோ: ஜப்பானின் புக்குஷிமா அணுமின் நிலையத்தில் இருந்து கடலில் வெளியேற்றப்பட்ட கதிர்வீச்சு செறிந்த நீரில் இருந்து, கதிர்வீச்சுப் பொருட்களை வடிகட்டும் விதமாக, கடலில் உருக்குச் சுவர் ஒன்றைக் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்னும் 10 ஆண்டுகளில் நான்கு அணு உலைகளையும் படிப்படியாக மூடுவதற்கான வரைவுத் திட்டம் ஒன்று ஜப்பான் அரசிடம் அளிக்கப்பட்டுள்ளது.புக்குஷிமா டாய் இச்சி அணுமின் நிலையத்தில், 2ம் உலையில் கதிர்வீச்சு கலந்த நீர், சமீபத்தில் டன் கணக்கில் கடலில் விடப்பட்டது. கடலில் நடத்தப்பட்ட ஆய்வில், கடல்நீரில் 63 ஆயிரம் மடங்கு கதிர்வீச்சு கலந்துள்ளது தெரிந்துள்ளது. இது அனுமதிக்கப்பட்ட அளவு என்று கூறப்படுகிறது.இந்நிலையில், கதிர்வீச்சு நீர் கடலில் விடப்பட்ட இடத்தில், 12 மீ., அகலத்திற்கு ஸ்டீலால் ஆன சுவர் ஒன்றைக் கட்டுவதற்கு அணுமின் நிலைய பொறியாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இச்சுவர், கடல் நீரில், கலந்துள்ள கதிர்வீச்சுப் பொருட்களை வடிகட்டும் அமைப்பாகச் செயல்படும்.

அதேநேரம், நான்கு அணு உலைகளையும் கட்டிக் கொடுத்த, டோஷிபா நிறுவனம், இன்னும் 10 ஆண்டுகளில் நான்கு உலைகளையும் படிப்படியாக மூடுவதற்கான வரைவுத் திட்டம் ஒன்றையும் ஜப்பான் அரசிடம் அளித்துள்ளது.இந்த 10 ஆண்டு காலம் என்பது, அமெரிக்காவின் மூன்று அணுமின் நிலையம் மூடப்படுவதற்கு எடுக்கப்பட்ட காலகட்டத்தில், மூன்றில் ஒரு பங்குதான் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையில், இன்று ஆளில்லா ஹெலிகாப்டர் ஒன்றை 1 மற்றும் 4ம் உலைகளின் மீது பறக்கவிட்டு, படங்கள் எடுக்க “டெப்கோ’ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது வானிலையைப் பொருத்து மாற்றத்திற்குள்ளாகலாம் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.இதற்கிடையில், ஜப்பானில் உணவின்றி வாடிவரும் மக்களுக்காக, ஆறு லட்சம் கேன்களில் மீன் வகை உணவுகளை அளிக்க மாலத் தீவு முன்வந்துள்ளது. மாலத் தீவில் இருந்து ஐரோப்பா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் இந்த மீன் வகை உணவை ஏற்க ஜப்பான் சம்மதித்துள்ளது.
கடந்த மார்ச் 11ம் தேதி ஜப்பானில் நிகழ்ந்த பயங்கர நிலநடுக்கம் மற்றும் சுனாமியில், மொத்தம் 82 சிறுவர் சிறுமியர் பெற்றோரை இழந்து வாடுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
மேலும் உலகம் செய்திகள்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *