கோவை: கோவையில், ஒரே மேடையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் இணைந்து பேசும் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்படலாம் என்று பேச்சு அடிபடுகிறது.
திமுக கூட்டணியில் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் சேர்ந்து முதல்வர் கருணாநிதி தலைமையில் திருவாரூரில் பிரமாண்டக் கூட்டம் போட்டுப் பேசி தற்போது பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் அதிமுக கூட்டணியியல் அப்படி ஒரு கூட்டம் இதுவரை நடைபெறவில்லை. இதையே ஒரு பிரசார டாப்பிக்காக மாற்றி திமுக தரப்பினர் கிண்டலடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோவையில் ஜெயலலிதா, விஜயகாந்த் உள்ளிட்ட கூட்டணித் தலைவர்கள் இணைந்து பங்கேற்கும் கூட்டம் நடைபெறலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது.
வருகிற 6ம் தேதி இந்தக் கூட்டம் நடைபெறலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் கொங்கு மண்டல அதிமுக கூட்டணியினர் பெரும் உற்சாகமடைந்துள்ளனர். இதுகுறித்து அதிமுக தலைமை அலுவலகம் எதையும் கூறவில்லை என்றபோதிலும் கூட்டம் நடைபெறுவது உறுதி என்கிறார்கள் கோவை பகுதி அதிமுக கூட்டணியினர்
Leave a Reply