மேற்கு சூடான் பிராந்தியமான டார்பரில், ஐ.நா அமைதி நடவடிக்கையாளர்களுக்கும் துப்பாக்கி ஏந்திய நபர்களுக்கும் இடையே துப்பாக்கி மோதல் நடந்தது.
இந்த மோதலில் பிடிபட்ட ஐ.நா அமைதித் தூதர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். கடத்தல்காரர்கள் ஐ.நா வாகனத்தையும் அதில் இருந்த 3 பேரையும் கடத்திச் சென்றனர். இதில் இருவரை பின்னர் விடுவித்தனர். ஒரு ஐ.நா அமைதித் தூதர் கொல்லப்பட்டார் என ஐ.நா தெரிவித்தது.
டார்பரில் கடந்த சில மாதங்களாக வன்முறை நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. ஆயுதம் தாங்கிய குழுவினருக்கும் சூடான் ராணுவத்தினருக்கும் இடையே கடுமையான சண்டை நடந்து வருகிறது. இந்த மோதலில் உயிர் பிழைக்க வேண்டும் என டிசம்பர் மாதம் முதல் 70 ஆயிரம் புதிய நபர்கள் டார்பர் முகாம்களுக்கு வந்துள்ளனர்.
வார இறுதியில் ஆயுதம் தாங்கிய 7 நபர்கள் மேற்கு டார்பர் முகாம்களுக்கு வந்து துப்பாக்கியால் தொடர்ந்து சுட்டனர். கடந்த 2003ம் ஆண்டு முதல் அரபு ஆதிக்கம் உள்ள கார்டோம் பகுதியில் டார்பரில் 3 லட்சம் மக்கள் போராட்டக்காரர்களால் கொல்லப்பட்டனர் என ஐ.நா கூறுகிறது. ஆனால் சூடான் அரசு தரப்பில் 10 ஆயிரம் பேர் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Leave a Reply