டோக்கியோ : ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி தாக்குதலுக்கு பின் அந்நாட்டில் உள்ள அணு உலைகள் வெடித்து சிதறியதால் கதிர்வீச்சு ஏற்பட்டுள்ளது.
மேலும் அணுஉலை பாதுகாப்புச் சுவரில் ஏற்பட்டுள்ள விரிசலால் அணு கதிர்வீச்சு கலந்த தண்ணீர் கடலில் கலந்து வருகிறது. இந்நிலையில் ஜப்பானின் புகுஷிமா அணு மின் நிலையத்தில் ஏற்பட்டுள்ள கசிவைத் தடுக்க முயற்சிகம் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கசிவைக் கண்டறிந்து தடுக்க வெள்ளை நிற பொடியை தண்ணீரில் கலந்து முயற்சி மேற்கொண்டுள்ளனர். ஏறத்தாழ கடலில் 13 கி.மீ. தூரத்துக்கு இவ்வாறு வெள்ளை நிற பொடியை நீரில் கலந்து கசிவைக் கண்டறியும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.கதிர் வீச்சு கலந்த நீர் கடலில் கலப்பதைத் தடுக்க சுமார் 3 வார காலமாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும் எந்த இடத்தில் கசிவு உள்ளது என்பதை துல்லியமாகக் கண்டறிய முடியவில்லை. இதனால் இப்போது புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தகைய .கதிர்வீச்சு கலந்த சுமார் 11,500 டன் தண்ணீர் கடலில் கலந்துள்ளதாக தகலவ்கள் தெரிவிக்கின்றன. . இப்படிப்பட்ட கதிர்வீச்சுகளால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்று சர்வதேச அணுசக்தி முகமை (ஐஏஇஏ) இயக்குநர் யுகியா அமானோ ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Leave a Reply