தமிழக அரசின் சார்பாக அண்ணா பல்கலை நடத்தும் டான்செட் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த கல்வியாண்டிற்கான(2011-2012) டான்செட் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலை, சென்னை அண்ணா தொழில்நுட்ப பல்கலை, கோவை அண்ணா தொழில்நுட்ப பல்கலை, மதுரை அண்ணா தொழில்நுட்ப பல்கலை, திருச்சி அண்ணா தொழில்நுட்ப பல்கலை, நெல்லை அண்ணா தொழில்நுட்ப பல்கலை, அரசு பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகள், அரசு உதவிபெறும் பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகள், அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ள சுயநிதி பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகள் ஆகியவற்றில் எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.ப்ளான் போன்ற படிப்புகளை மேற்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கானது இந்த தேர்வு.
வெளிமாநில மாணவர்களும் இந்த தேர்வை எழுதலாம் என்றாலும், சம்பந்தப்பட்ட பல்கலை அல்லது கல்வி நிறுவனமே மாணவர் சேர்க்கை பற்றிய இறுதி முடிவை எடுக்கும்.
இப்படிப்புகளில் சேர்வதற்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள், ஒவ்வொரு கல்வி நிறுவனமும் வெளியிடும் சேர்க்கை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
தற்போது இளநிலை படிப்புகளில் இறுதியாண்டு தேர்வு எழுத காத்திருப்பவர்களும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். மேற்கூறிய அனைத்து முதுநிலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுக்கு, விண்ணப்பதாரர்கள் ஒரே ஒரு விண்ணப்பம் மட்டுமே சமர்பிக்க வேண்டும்.
இந்த நுழைவுத் தேர்வுக்கான கட்டணம் ரூ.300. அதேசமயம் எஸ்.சி/எஸ்.சி.ஏ/எஸ்.டி. மாணவர்கள் ரூ.150 செலுத்தினால் போதும். அதேசமயத்தில் ஒரு மாணவர் ஒன்றுக்கும் மேற்பட்ட படிப்புகளுக்கு எழுத விரும்பினால், ஒவ்வொரு கூடுதல் படிப்பிற்கும் தனித்தனி கட்டணம் செலுத்த வேண்டும்.
இத்தேர்வுக்கு பதிவு செய்வதற்கான இறுதி நாட்கள், முழுமையான தகுதி விவரங்கள், பிரிவு வாரியான தேர்வு தேதிகள் மற்றும் பிற விரிவான விவரங்களை முழுமையாக தெரிந்துகொள்ள www.annauniv.edu என்ற வலைதளம் சென்று TANCET 2011 என்பதை கிளிக் செய்து உள்ளே செல்லவும்.
Leave a Reply