ஐதராபாத்: ஐ.பி.எல்., தொடரில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி தனது முதல் வெற்றியை ருசித்தது. நேற்று நடந்த லீக் போட்டியில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியை 33 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்தியாவில் நான்காவது ஐ.பி.எல்., “டுவென்டி-20′ தொடர் நடக்கிறது. நேற்று ஐதராபாத்தில் நடந்த லீக் போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் மோதின. “டாஸ்’ வென்ற பெங்களூரு கேப்டன் வெட்டோரி, “பீல்டிங்’ தேர்வு செய்தார்.
சிப்லி அரைசதம்:
டெக்கான் அணிக்கு சிகர் தவான்(11) ஏமாற்றம் அளித்தார். பின் கேப்டன் சங்ககரா, சன்னி சோகல் இணைந்து பொறுப்பாக ஆடினர். சோகல் 38 ரன்களுக்கு வெளியேறினார். அடுத்து வந்த பாரத் சிப்லி அதிரடியாக ரன் சேர்த்தார். தில்ஷன் பந்தில் ஒரு இமாலய சிக்சர் அடித்தார். மறுபக்கம் தில்ஷன் பந்தில் சங்ககராவும் ஒரு சிக்சர் விளாசினார். இவர் 36 ரன்களுக்கு வான் டர் வாத் வேகத்தில் வீழ்ந்தார். தனது வாணவேடிக்கையை தொடர்ந்த சிப்லி, நைனன் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர்கள் அடித்தார். பின் ஜாகிர் ஓவரில் “ஹாட்ரிக்’ பவுண்டரி அடித்த சிப்லி, அரைசதம் கடந்து அசத்தினார். மறுமுனையில் டுமினி தன் பங்குக்கு வெட்டோரி, வான் டர் வாத் பந்துகளில் சிக்சர்கள் அடிக்க, ஸ்கோர் மின்னல் வேகத்தில் உயர்ந்தது. ஜாகிர் வீசிய கடைசி ஓவரில் டுமினி(22), கிறிஸ்டியன்(0) அவுட்டாகினர். டெக்கான் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 175 ரன்கள் எடுத்தது. சிப்லி 61 ரன்களுடன்(5 பவுண்டரி, 3 சிக்சர்) அவுட்டாகாமல் இருந்தார்.
விக்கெட் சரிவு:
சவாலான இலக்கை விரட்டிய பெங்களூரு அணியை டெக்கான் “வேகங்கள்’ போட்டுத் தாக்கினர். இஷாந்த் பந்தில் தில்ஷன்(7) அவுட்டானார். “ஒன்-டவுனாக’ களமிறக்கப்பட்ட ஜாகிர்(0), ஸ்டைன் பந்தில் காலியானார். கோனி வேகத்தில் அகர்வால்(16), டிவிலியர்ஸ்(0) நடையை கட்ட, 4 விக்கெட்டுக்கு 29 ரன்கள் எடுத்து தத்தளித்தது. அணியை காப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சவுரப் திவாரியும்(7) ஏமாற்றினார்.
கோஹ்லி ஆறுதல்:
ஒருபக்கம் விக்கெட் சரிந்தாலும் மறுபக்கம் துணிச்சலாக போராடினார் விராத் கோஹ்லி. இவர், அமித் மிஸ்ரா சுழலில் இரண்டு சிக்சர்கள் விளாசி அரைசதம் கடந்தார். புஜாரா 25 ரன்கள் எடுத்தார். கோனி ஓவரில் ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்த விராத் கோஹ்லி(71), அடுத்த பந்தில் போல்டாக, பெங்களூரு அணியின் நம்பிக்கை தகர்ந்தது. பெங்களூரு அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 142 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. கடந்த இரு போட்டிகளில் ராஜஸ்தான், கோல்கட்டா அணிகளிடம் வீழ்ந்த டெக்கான் அணி, நேற்று முதல் வெற்றியை பெற்றது.
ஆட்ட நாயகன் விருதை ஸ்டைன் வென்றார்.
சொந்த மண்ணில்…
ஐதராபாத்தை சேர்ந்த டெக்கான் சார்ஜர்ஸ் அணி சொந்த மண் சோகத்துக்கு நேற்று முற்றுப்புள்ளி வைத்தது. பெங்களூரு அணியை வீழ்த்தியதன் மூலம் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் சர்வதேச மைதானத்தில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. முன்னதாக இங்கு விளையாடிய 8 போட்டிகளிலும் டெக்கான் அணி தோல்வி அடைந்தது. கடந்த 2008ல், இங்கு நடந்த ஏழு போட்டிகளில் தோல்வி கண்டது. இம்முறை, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்தது.
—
ஸ்கோர் போர்டு
டெக்கான் சார்ஜர்ஸ்
சோகல்(கே)திவாரி(ப)நைனன் 38(37)
தவான்(கே)வெட்டோரி(ப)ஜாகிர் 11(9)
சங்ககரா(கே)டிவிலியர்ஸ்(ப)வான் டர் 36(25)
சிப்லி-அவுட் இல்லை- 61(35)
டுமினி(கே)கோஹ்லி(ப)ஜாகிர் 22(15)
கிறிஸ்டியன் எல்.பி.டபிள்யு.,(ப)ஜாகிர் 0(1)
உதிரிகள் 7
மொத்தம்(20 ஓவரில் 5 விக்.,) 175
விக்கெட் வீழ்ச்சி: 1-20(தவான்), 2-70(சோகல்), 3-113(சங்ககரா), 4-168(டுமினி), 5-175(கிறிஸ்டியன்).
பந்துவீச்சு: ஜாகிர் 4-0-32-3, வான் டர் 4-0-30-1, அரவிந்த் 3-0-26-0, வெட்டோரி 4-0-29-0, நைனன் 3-0-34-1, தில்ஷன் 2-0-22-0.
பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்
அகர்வால்(கே)மிஸ்ரா(ப)கோனி 16(13)
தில்ஷன்(கே)சங்ககரா(ப)சர்மா 7(8)
ஜாகிர்(ப)ஸ்டைன் 0(3)
கோஹ்லி(ப)கோனி 71(51)
டிவிலியர்ஸ்(கே)சங்ககரா(ப)கோனி 0(7)
திவாரி(கே)சங்ககரா(ப)மிஸ்ரா 7(10)
புஜாரா(கே)கிறிஸ்டியன்(ப)ஸ்டைன் 25(15)
வான் டர்(கே)சங்ககரா(ப)ஸ்டைன் 0(1)
வெட்டோரி-அவுட் இல்லை- 3(6)
நைனன்(கே)சங்ககரா(ப)கிறிஸ்டியன் 3(6)
அரவிந்த்-அவுட் இல்லை- 2(3)
உதிரிகள் 8
மொத்தம்(20 ஓவரில் 9 விக்.,) 142
விக்கெட் வீழ்ச்சி: 1-8(தில்ஷன்), 2-16(ஜாகிர்), 3-27(அகர்வால்), 4-29(டிவிலியர்ஸ்), 5-56(திவாரி), 6-118(புஜாரா), 7-118(வான் டர்), 8-130(கோஹ்லி), 9-137(நைனன்).
பந்துவீச்சு: ஸ்டைன் 4-0-24-3, இஷாந்த் 4-0-21-1, கோனி 4-0-31-3, கிறிஸ்டியன் 4-0-22-1, மிஸ்ரா 4-0-41-1.
Leave a Reply