புதுடில்லி: ஐ.பி.எல்., லீக் போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி, 16 ரன்கள் வித்தியாசத்தில் டில்லி டேர்டெவில்ஸ் அணியை வீழ்த்தியது.
மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்திய சேவக்கின் டில்லி அணி, மூன்றாவது தோல்வியை பெற்றது.
நான்காவது ஐ.பி.எல்., “டுவென்டி-20′ தொடரின் லீக் போட்டிகள், தற்போது நடக்கின்றன. இதில் நேற்று டில்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடந்த போட்டியில் டில்லி டேர்டெவில்ஸ் அணி, டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் மோதின.
“டாஸ்’ வென்ற டெக்கான் கேப்டன் சங்ககரா, பேட்டிங் தேர்வு செய்தார். டெக்கான் அணியில் டுமினி, இஷாந்த் சர்மா நீக்கப்பட்டு, காமிரான் ஒயிட், ஹர்மீட் சிங் சேர்க்கப்பட்டனர்.
தவான் ஏமாற்றம்:
டெக்கான் அணிக்கு சிகர் தவான், சன்னி சோகல் துவக்கம் கொடுத்தனர். டின்டா வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில், பவுண்டரி அடித்து அதிரடியை ஆரம்பித்தார் சன்னி சோகல். இதேஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி விளாசிய சிகர் தவான் (8), இம்முறையும் நிலைக்கவில்லை.
சங்ககரா அபாரம்:
பின் சன்னி சோகலுடன், சங்ககரா இணைந்தார். இந்த ஜோடி டில்லி அணியின் பவுலர்களை ஒருகை பார்த்தனர். இருவரது மிரட்டலான அதிரடியில், ஸ்கோர் “ஜெட்’ வேகத்தில் உயர்ந்தது. நதீம் வீசிய ஒரு ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரிகள் அடித்தார் சங்ககரா. தொடர்ந்து யோகேஷ் பவுலிங்கிலும் ரன்மழை பொழிய, 11 ஓவரில் டெக்கான் அணி 103/1 ரன்கள் எடுத்தது.
சோகல் அசத்தல்:
இந்நிலையில் சங்ககரா 49 ரன்களுக்கு அவுட்டாகி அரைசத வாய்ப்பை இழந்தார். ஹோப்ஸ், இர்பான் பதான் ஓவரில், இரண்டு, இரண்டு பவுண்டரிகள் அடித்த சன்னி சோகல், மார்கலையும் விட்டுவைக்கவில்லை. இவர், 41 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து நதீமிடம் சிக்கினார். இதன் பின் அணியின் ஸ்கோர் வேகம் குறைந்து போனது. பின்வந்த கிறிஸ்டியன் (8), இம்முறை சிக்சர் அடிக்காமல் திரும்பினார்.
கடைசி நேரத்தில் காமிரான் ஒயிட் (31*), சிப்லி (5*) கைகொடுக்க, டெக்கான் சார்ஜர்ஸ் அணி, 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்தது.
கைவிட்ட சேவக்:
சற்று கடின இலக்கை விரட்டிய டில்லி அணியின் துவக்கம் மோசமாக அமைந்தது. கிறிஸ்டியன் ஓவரில் “ஹாட்ரிக்’ பவுண்டரி அடித்த சேவக், 12 ரன்னுக்கு அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். நமன் ஓஜா 2, ஆரோன் பின்ச் “டக்’ என, அடுத்தடுத்து அவுட்டாக 38 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து, டில்லி அணி தத்தளித்தது.
வார்னர் ஆறுதல்:
ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தா<லு<ம், மறுபக்கம் உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் டேவிட் வார்னர். ஸ்டைன் ஓவரில் இரண்டு பவுண்டரி விளாசிய வார்னர், ஓஜா சுழலில் "சூப்பர்' சிக்சரை அடித்தார். வேணுகோபால் ராவ் (21) சற்று தாக்குப்பிடித்தார். இந்நிலையில் அரைசதம் அடித்த வார்னர் (51) அவுட்டாக, டில்லி அணியின் வெற்றிக்கனவு தகர்ந்தது.
டில்லி தோல்வி:
இர்பான் பதான் 9 பந்துகளில் 5 ரன்கள் எடுத்தார். யோகேஷ் நாகர் 23 ரன்களுக்கு திரும்பினார். கடைசி நேரத்தில் ஹோப்ஸ், மார்கல் போராடிய போதும், அது வெற்றிக்கு உதவவில்லை. டில்லி டேர்டெவில்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 152 ரன்கள் மட்டும் எடுத்து, 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
ஹோப்ஸ் (23), மார்கல் (8) அவுட்டாகாமல் இருந்தனர். டெக்கான் அணியின் கிறிஸ்டியன், ஹர்மீட் சிங் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஆட்டநாயகன் விருதை சன்னி சோகல் தட்டிச் சென்றார்.
ஸ்கோர்போர்டு
டெக்கான் சார்ஜர்ஸ்
சோகல்(கே)பின்ச்(ப)நதீம் 62(41)
தவான்(ப)இர்பான் 8(5)
சங்ககரா(கே)பின்ச்(ப)டின்டா 49(35)
ஒயிட்-அவுட் இல்லை- 31(25)
கிறிஸ்டியன்(ப)ஹோப்ஸ் 8(11)
சிப்லி-அவுட் இல்லை- 5(3)
உதிரிகள் 5
மொத்தம் (20 ஒவரில் 4 விக்.,) 168
விக்கெட் வீழ்ச்சி: 1-14(சிகர் தவான்), 2-106(சங்ககரா), 3-129(சன்னி சோகல்), 4-156(கிறிஸ்டியன்).
பந்து வீச்சு: டின்டா 4-0-33-1, இர்பான் பதான் 4-0-28-1, மார்கல் 4-0-31-0, ஹோப்ஸ் 4-0-36-1, நதீம் 3-0-24-1, யோகேஷ் நாகர் 1-0-13-0.
டில்லி டேர்டெவில்ஸ்
வார்னர்(கே)தேஜா(ப)தவான் 51(48)
சேவக்(கே)கிறிஸ்டியன்(ப)ஹர்மீட் 12(7)
ஓஜா-எல்.பி.டபிள்யு.,(ப)கிறிஸ்டியன் 2(4)
பின்ச்(கே)சங்ககரா(ப)ஹர்மீட் 0(1)
வேணுகோபால்(கே)கிறிஸ்டியன்(ப)மிஸ்ரா 21(23)
இர்பான்(கே)சிப்லி(ப)பிரக்யான் 5(9)
ஹோப்ஸ்-அவுட் இல்லை- 18(15)
யோகேஷ்(ப)கிறிஸ்டியன் 22(10)
மார்கல்-அவுட் இல்லை- 8(3)
உதிரிகள் 13
மொத்தம் (20 ஓவரில் 7 விக்.,) 152
விக்கெட் வீழ்ச்சி: 1-28(சேவக்), 2-33(நமன் ஓஜா), 3-38(ஆரோன் பின்ச்), 4-99(வேணுகோபால் ராவ்), 5-99(டேவிட் வார்னர்), 6-112(இர்பான் பதான்), 7-144(யோகேஷ் நாகர்).
பந்துவீச்சு: ஸ்டைன் 4-0-24-0, கிறிஸ்டியன் 4-0-38-2, ஹர்மீட் சிங் 4-0-27-2, பிரக்யான் ஓஜா 3-0-21-1, அமித் மிஸ்ரா 4-0-28-1, சிகர் தவான் 1-0-7-1.
Leave a Reply