தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி வென்றால், துணை முதல்வர் பதவிக்கு முயற்சிக்க மாட்டேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் அவர் இன்று தேர்தல் பிரசாரத்தில் பேசும்போது இவ்வாறு தெரிவித்தார்.
அதிமுக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அமல்படுத்தப்படும் என்றும் விஜயகாந்த் கூறினார்.
அதுமட்டுமின்றி உயர்பதவிக்கு முயற்சிக்க மாட்டேன், மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை செய்வதில் அதிகம் கவனம் செலுத்துவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply