கீழக்கரை: “”தூத்துக்குடி, இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து தேர்தலுக்கு பின் துவங்கப்படும்,”
என, மத்திய அமைச்சர் வாசன் கூறினார்.
ராமநாதபுரம் காங்,வேட்பாளர் ஹசன் அலியை ஆதரித்துகீழக்கரை , ஏர்வாடி, ராமநாதபுரம் மற்றும் தொகுதியின் பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இந்த தேர்தலில் ராகுல் பிரசாரம் இளைஞர்களுக்கு நம்பிக்கை அளிக்கும். கூட்டணியின் வெற்றிக்கும் அடித்தளமாக அமையும். ஜனநாயக முற்போக்கு கூட்டணி வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மக்களும் நம்பிக்கையுடன் ஓட்டளிக்க உறுதியுடன் உள்ளனர். தூத்துக்குடி – இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்தை தேர்தலுக்கு பின் துவங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்பட்டுள்ளன. ராமேஸ்வரம்- தலைமன்னார் கப்பல் போக்குவரத்து மிக அவசியமானதால், அதற்கான பணி ஆய்வில் உள்ளது. வெகு விரைவில் கப்பல் சேவை துவங்கப்படும், என்றார். தி.மு.க., சார்பில் தேர்தல் பிரசாரம் செய்து வரும் நடிகர் வடிவேலு பிரசாரம் குறித்து கேட்டபோது, “” நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை,” என்றார்.
Leave a Reply