மும்பை : பெட்ரோலியம், பெட்ரோலியப் பொருட்கள், சில்லரை வணிகம், ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மெண்ட் உள்ளிட்ட பல பிரிவு வர்த்தகங்களில் முடிசூடா மன்னனாக விளங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறவனம், இந்தியாவில் நிதிச்சேவையில் களமிறங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முககேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் மற்றும் அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஏடிஏ குழுமம், சமீபத்தில் ரிசர்வ் வங்கியிடமிருந்து நிதிச் சேவை செய்வதற்கான அனுமதியை பெற்றது. தற்போது, தங்களது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், அமெரிக்காவின் நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் டீ. இ. ஷா நிறுவனத்துடன் கைகோர்த்து, இந்தியாவில் நிதிச்சேவையில் களமிறங்க திட்டமிட்டுள்ளது. இந்த கைகோர்ப்பிற்கான நடவடிக்கைகள் தற்போதுதான் துவங்கியுள்ளது. விரைவில் இறுதிவடிவம் பெறும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடஅமெரிக்கா, ஐரோப்பா, மேற்காசியா மற்றும் ஆசியா உள்ளிட்ட நாடுகளில் முன்னணி குளோபல் இன்வெஸ்ட்மெண்ட் மற்றும் டெக்னாலஜி டெவலப்மெண்ட் நிறுவனமாக டீ. இ. ஷா நிறுவனம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply