மும்பை: மும்பையின் பிரபல லீலாவதி மருத்துவமனையில் வருமான வரித்துறையினர் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
லீலாவதி அறக்கட்டளை மருத்துவமனையின் நிதித்துறை, கொள்முதல் துறை, பயோமெடிக்கல் மற்றும் மருந்தியல் துறைகளில் இந்த சோதனைகள் நடைபெற்றன.
இந்த நான்கு துறைகளிலும் உள்ள கம்ப்யூட்டர்களை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இந்தத் துறைகளின் தலைவர்களிடம் அவர்களின் வங்கிக் கணக்குகள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக மும்பை லீலாவதி மருத்துவமனையின் அறங்காவலர்கள் சட்டவிரோத பணப் பரிமாற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுவது குறித்து விசாரணை நடத்தக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக உச்சநீதிமன்றம் புதன்கிழமையன்று நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
சிபிஐ, அமலாக்கப் பிரிவு, செபி மற்றும் மத்திய அரசுக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து, லீலாவதி மருத்துவமனையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.
Leave a Reply