புதுடில்லி:நடப்பு பயிர் பருவத்தில் பணப்பயிர்களானபருத்தி மற்றும் பருப்பு வகைகளின் உற்பத்தி சாதனை அளவை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இவற்றுக்கானதேவை அதிகரித்துள்ளதாலும் நல்ல விலை கிடைப்பதாலும் விவசாயிகள்சு அர” கொள்முதல் நிறுவனங்களை நாடாமல் சந்தையில் விற்றுசு நல்ல அளவில் வருவாய் ஈட்டுகின்றனர். மேலும்இவ்வகை பொருள்களுக்கு அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலையை விடசு சந்தை விலை அதிகமாக உள்ளதால் அரசு முகமை அமைப்புகளின் கொள்முதலும் குறைந்துள்ளது.ஆண்டுதோறும்விதைப்பு பருவம் தொடங்கும்போதுவிவசாயிகளை பாதுகாக்கும்நோக்குடன் விளைபொருள்களுக்கு அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்கிறது. இதன்படி அரசின் முகமை அமைப்புகளானதேசியவேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு (நாபெட்) இந்திய பருத்தி கழகம் (சி.சி.ஐ.) மற்றும் அந்தந்த மாநிலங்களைச்சேர்ந்த அரசுநிறுவனங்கள் விவசாயிகளிடம் இருந்து விளை பொருள்களைசு அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்து வருகின்றன. ஆனால், நடப்பு ஆண்டில் பருத்தி பருப்பு வகைகள் ஆகியவற்றின் சந்தை விலைசு அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலையை விட அதிகமாக உள்ளதால்பொதுத்துறை நிறுவனங்கள் இவற்றை கொள்முதல் செய்வதை குறைத்துக் கொண்டுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசு முகமை அமைப்புகளின் கொள்முதல் படிப்படியாக குறைந்து வருவதாக இத்துறையைச்சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.கடந்த 2008 – 09ம் ஆண்டில் சி.சி.ஐ. 89 லட்சம் பருத்தி பொதிகளை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்தது. இது 2009 -10ம் ஆண் டில் 57.5 லட்சம் பருத்தி பொதிகளாக குறைந்துபோனது. அதுபோல்மற்றொரு நிறுவனமான நாபெட் கடந்த 2008 – 09ம் ஆண்டில் 33 லட்சம் பருத்தி பொதிகளை கொள்முதல் செய்தது.இந்த கொள்முதல் 2009 – 10ம் ஆண்டில் 5 லட்சம் பொதிகளாக சரிந்தது. நடப்பு 2010 – 11ம் ஆண்டில் குறிப்பிடத்தக்க அளவிற்கு கொள் முதல்மேற்கொள்ளப்படவில்லை. ஏனெனில் மொத்த பருத்தி உற்பத்தியில் 90 சதவீதத்தைசு தனியார் நிறுவ னங்களே வாங்கிக் கொள்கின்றன.இவ்வாண்டுசு ஒரு குவிண்டால் பீ.பீ. வகை பருத்திக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை 3சு000 ரூபாய் எனசு அர” நிர்ணயித்துள்ளது. ஆனால்சு தற்போது சந்தையில் ஒரு குவிண்டால் பீ.பீ. வகை பருத்தி 6,400 ரூபாய்க்கு விலைபோகிறது. இதேபோல் சுதேசி மற்றும் எஸ்.6 பருத்தி வகைகளின் குறைந்தபட்ச ஆதரவு விலை முறையே 2,750 மற்றும் 2,850 ரூபாயாக உள்ளது. ஆனால் இவற்றின் சந்தை விலை முறையே 5 800 மற்றும் 6,850 ரூபாய் என்ற அளவில் உயர்ந்து காணப்படுகிறது.கடந்த 2008ம் ஆண்டு அரசு ஒரு குவிண்டால் பருத்திக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை 2,200 ரூபாயிலிருந்து 3,000 ரூபாயாக மிகவும் உயர்த்தியது. இது சந்தை விலையை விட அதிகமாக இருந்ததால் விவசாயிகள் அதிக அளவில் அரசு முகமை அமைப்புகளுக்கு பருத்தியை விற்பனை செய்தனர். மத்தியவேளாண் அமைச்சகம் விளைபொருள்கள் குறித்த மூன்றாவது முன்கூட்டிய மதிப்பீட்டு அறிக்கையைஅண்மையில் வெளியிட்டது. அதில் 2010 -11ம் ஆண்டில் பருத்தி உற்பத்தி 3.39கோடி பொதிகளாக (ஒரு பொதி -170 கிலோ) இருக்கும் என்று தெரிவிக் கப்பட்டுள்ளது. இது, கடந்த 2009-10ம் ஆண்டில் 2.40கோடி பொதிகளாக இருந்தது. பருத் திக்கு நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் அதிக அளவில் பருத்தியை பயிர் செய்யத் தொடங்கி யுள் ளனர். இதனால்வரும் பருவத்தில் பருத்தி உற்பத்தி சாதனை அளவாக 4கோடி டன் பொதிகள் என்ற அளவிற்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பருப்பு வகைகளைப் பொறுத்தவரை கடந்த 30 ஆண்டு களுக் கும்மேலாக அரசின் முகமை அமைப்பான நாபெட் மட்டுமே பருப்பு கொள்முதலில் ஈடுபட்டு வருகிறது. இந்த அமைப்பு கடந்த 2009 -10ம் ஆண்டில் 32 ஆயிரத்து 565 டன் பருப்பு வகைகளை கொள்முதல் செய்தது. இது 2010 – 11ம் ஆண்டில் 11 ஆயிரம் டன் என்ற அளவில் குறையும் என மதிப்பிடப் பட்டுள் ளது.நடப்பு 2011 – 12ம் ஆண்டில் பச்சைப்பயிறு பாசிப்பருப்பு உள்ளிட்ட பெரும்பாலான ரபி பருவ பருப்பு வகைகளின் சந்தை விலைசு குறைந்த பட்ச ஆதரவு விலையை விட அதிகமாக உள்ளது.உள்நாட்டில்சு பருப்பு வகைகள் உற்பத்தி 2010 -11ம் ஆண்டில் 1.73கோடி டன்னாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2009 -10ம் ஆண்டில் இது 1.46கோடி டன்னாக இருந்தது. நடப்பு ஆண்டில் பருப்பு வகைகளின் உற்பத்தி சாதனை அளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் இவற்றின் விலை குறைய வாய்ப்பில்லை என்று கூறப் படுகிறது.எனினும் இந்த உபரி உற்பத்தி ஆண்டுதோறும் இறக்குமதியாகும் 20 லட்சம் டன் பருப்பு வகைகளை ஈடு செய்யக் கூடியதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. பருத்திபருப்பு வகைகளுக்கு சந்தையில் நல்ல விலை கிடைத்து வருவது விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Leave a Reply