மும்பை : பலதரப்பட்ட வர்த்தக குழுமமான ஐடிசி நிறுவனம், வர்த்தகத்தை விரிவுபடுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, ஐடிசி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அப்பராரெல் ரீடெயில் வர்த்தகத்தை விரிவுபடுத்தும் நடவடிக்கைகளில் தற்போது களமிறங்கி உள்ளோம். இதன்காரணமாக ‘வில்ஸ் லைப்ஸ்டைல்’ பெயரிலான ஆண்கள் பேஷன் ஆயத்த ஆடைகள் வர்த்தகத்தை விரிவுபடுத்த உள்ளோம். இதற்காக, ‘மென்ஸ்வேர் ஒன்லி’ மற்றும் ‘பாட்டியூக் ஸ்டோர்’ என்ற பெயரில் 25 புதிய ஸ்டோர்களை அடுத்த 15 மாதங்களுக்குள் நிறுவ உள்ளோம். இதன்மூலம், தங்களது நிறுவன வர்த்தகம் விரிவுபடுத்தப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply