லண்டன்:பிரிட்டன் மன்னராக முடி சூடுவதற்காக, நீண்ட காலமாகக் காத்திருப்பதில், இளவரசர் சார்லஸ் புதிய சாதனையை படைத்துள்ளார்.
பிரிட்டன் இளவரசர் சார்லசுக்கு மூன்று வயதாக இருக்கும்போது, அவரது தாயாரும், அப்போதைய இளவரசியுமான எலிசபெத், பிரிட்டன் ராணியாக பதவியேற்றார். தற்போது இளவரசர் சார்லசுக்கு 62 வயதாகிறது. ராணி எலிசபெத்துக்கு 85 வயதாகிறது. தொடர்ந்து நல்ல உடல் நிலையுடனும், நினைவாற்றலுடனும் எலிசபெத் திகழ்கிறார். இதனால், பிரிட்டன் மன்னராக முடி சூடுவதற்காக, சார்லஸ் தொடர்ந்து காத்திருக்கிறார்.பிரிட்டன் மன்னராக பதவியேற்பதற்கான காத்திருப்போர் பட்டியலில் முதல் இடத்தில் சார்லசும், இரண்டாவது இடத்தில் சார்லஸ் – டயானா தம்பதியின் மூத்த மகன் வில்லியமும்,மூன்றாவது இடத்தில் இளைய மகன் ஹாரியும் உள்ளனர்.
இந்நிலையில், மன்னராக பதவியேற்பதற்காக, இளவரசர் சார்லஸ் காத்திருந்து, நேற்றுடன் 59 ஆண்டுகள், இரண்டு மாதங்கள் மற்றும் 14 நாட்கள் முடிவடைந்து விட்டன. இதன் மூலம், பிரிட்டன் மன்னராக முடி சூடுவதற்காக, அதிக நாட்கள் காத்திருந்த இளவரசர் என்ற சாதனையை, சார்லஸ் படைத்துள்ளார். இதற்கு முன், ராணி விக்டோரியாவுக்கு பின், பிரிட்டன் மன்னராக பதவியேற்ற எட்டாவது எட்வர்ட், 59 ஆண்டுகள், இரண்டு மாதங்கள் மற்றும் 13 நாட்கள் காத்திருந்தார். இந்த சாதனையை தற்போது சார்லஸ் முறியடித்துள்ளார்.
இதற்கிடையே, பிரிட்டன் பத்திரிகை ஒன்று நடத்திய கருத்துக் கணிப்பில், “பிரிட்டனின் பெரும்பாலான மக்கள், ராணி எலிசபெத்துக்கு பின், சார்லஸ் – டயானா தம்பதியின் மூத்த மகன் வில்லியம் தான், மன்னராக பதவியேற்க வேண்டும் என்றும், சார்லஸ் பதவியேற்பதில் தங்களுக்கு விருப்பம் இல் லை என்றும் தெரிவித்துள் ளனர். இளவரசர் வில்லியம், தனது தோழி கேத் மிடில்டனை, வரும் 29ம் தேதி திருமணம் செய்து கொள்ளவிருக்கும் சூழ்நிலையில் வெளியாகியுள்ள இந்த கருத்துக் கணிப்பு, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply