புதுடில்லி : அரிசி மற்றும்
கோதுமை கையிருப்பு அதிகரித்துள்ளதால், இவற்றை ஏற்றுமதி செய்ய அரசு ஆலோசித்து வருகிறது.கடந்தாண்டு, கோதுமை உற்பத்தி, எட்டு கோடியே, 7 லட்சம் டன்னாக இருந்தது.
இந்த ஆண்டு, எட்டு கோடியே, 40 லட்சம் டன் அளவுக்கு கோதுமை உற்பத்தியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல, இந்த ஆண்டு, அரிசி உற்பத்தி, ஒன்பது கோடியே, 40 லட்சம் டன் அளவுக்கு இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இந்திய உணவுக் கழக கிடங்குகளில், நிர்ணயிக்கப்பட் அளவான, இரண்டு கோடியே, 10 லட்சம் டன்னை மீறி, நான்கு கோடியே, 20 லட்சம் டன் அளவுக்கு, அரிசி மற்றும் கோதுமை இருப்பு உள்ளது. எனவே, அதிகப்படியான அரிசி மற்றும் கோதுமையை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இன்னும் இரண்டு வாரங்களில், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, விவசாய அமைச்சர் சரத் பவார் உள்ளிட்ட அமைச்சர்கள் கூடி, அரிசி மற்றும் கோதுமையை ஏற்றுமதி செய்ய அனுமதி அளிப்பார்கள் என, எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply