இந்திய துறைமுகங்களிலிருந்து கடல் வழி சுற்றுலா அறிமுகம் செய்கிறது ‘அமெட்’ நிறுவனம்

சென்னை : கடல் வழி சுற்றுலாவை இந்திய துறைமுகங்களிலிருந்து

முதல் முறையாக அறிமுகம் செய்கிறது அமெட் ஷிப்பிங் இந்தியா நிறுவனம்.

இதுகுறித்து, அந்நிறுவன தலைவர் ராமச்சந்திரன் மற்றும் நிர்வாக இயக்குனர் பாரதி ஆகியோர் கூறியதாவது: வெளிநாட்டு சுற்றுலா கப்பல்கள் மிகச் சில தான், இந்திய துறைமுகங்களை தொட்டுச் செல்கின்றன. ஆனால், ‘அமெட்’ நிறுவன கப்பல்கள் இந்திய துறைமுகங்களிலிருந்து சுற்றுலாவைத் துவக்குகின்றன. பருவ நிலைக்கு ஏற்ப, சென்னை, கொச்சி, மும்பை துறைமுகங்களிலிருந்து பயணத் திட்டத்தை வகுக்கிறோம். நடுத்தர வருவாய் பிரிவினருக்கும் ஏற்ற வகையில் (5,000 முதல் 12,000 ரூபாய்) பயணக் கட்டணங்கள் உள்ளன. முதல் கட்டமாக, லட்சத்தீவு, அந்தமான், கொழும்பு போன்ற சுற்றுலா பகுதிகளுக்கு, ஒரு நாள் முதல் ஒரு வாரம் வரை சென்று வரலாம். இது தவிர, ‘அமெட்’ கப்பலை வாடகைக்கு எடுத்துக் கொண்டு சுற்றுலா செல்லவும், நிகழ்ச்சிகளை நடத்தவும் அனுமதிக்கிறோம். வரும் காலத்தில், ஆசிய நாடுகளுக்கும் சென்று வர சுற்றுலா திட்டங்களை வகுக்க உள்ளோம். கப்பலில் அனைத்து பிரிவினருக்கும் ஏற்ற வகையில் படுக்கை வசதிகள், உணவு விடுதிகள், கேளிக்கை விளையாட்டுகள், நீச்சல் குளம், குழந்தைகள் விளையாட்டுத் திடல்கள் உள்ளன. இந்திய கப்பல் துறை இயக்குனரகம், அங்கீகாரம் பெற்ற கப்பலை, ‘அமெட்’ நிறுவனம் பெற்றுள்ளது. சர்வதேச கப்பல்களைப் போலவே பாதுகாப்பு வசதிகளைக் கொண்டது. சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல், கப்பலில் ஏற்படும் கழிவுகளை சுத்திகரித்து வெளியேற்றும் வசதிகளைப் பெற்றது.நூறு கோடி செலவில், ‘அமெட்’ மெஜஸ்டிக் கப்பலை வாங்கியுள்ளோம். வளர்ந்து வரும் இந்திய சுற்றுலா சந்தையை இலக்காகக் கொண்டு செயல்படுகிறோம். ‘அமெட்’ நிறுவனம், கடல் சார் கல்வி, பயிற்சி, சுற்றுலா ஆகிய மூன்றையும் ஒருங்கே செயல்படுத்துகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *