வாஷிங்டன்: வாஷிங்டன்: சர்வதேச அளவில் பெரும் நடுக்கத்தை ஏற்படுத்திய, அமெரிக்காவை ஆட்டிப்படைத்து, அலைய விட்ட சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டு விட்டார்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே அப்போடாபாத் என்ற இடத்தில் பதுங்கியிருந்த அவரை பாகிஸ்தானின் சிஐஏ உதவியுடன் அமெரிக்கப் படையினர் கொன்றுள்ளதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அறிவித்துள்ளார்.
இது மிகவும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சி என்றும் ஒபாமா வர்ணித்துள்ளார்.
இதுகுறித்து முப்படைத் தளபதிகள் புடை சூழ வாஷிங்டனில் ஒபாமா செய்தியாளர்களிடம் பேசுகையில், இது மிகவும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டு விட்டார். அவரது மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பின்லேடன் பதுங்கியுள்ள இடம் குறித்த உறுதியான தகவல் படையினருக்குக் கிடைத்ததும் என்னிடம் தெரிவித்தனர். நான் உடனடியாக தாக்குதல் நடத்தி பின்லேடனைக் கொல்லுமாறு உத்தரவிட்டேன். அதன்படி நடந்துள்ளது.
இத்துடன் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் முடிந்து விட்டதாக நாங்கள் கருதவில்லை. தொடர்ந்து அதில் ஈடுபடுவோம் என்றார்.
டிஎன்ஏ பரிசோதனையின்படி ஒசாமா இறந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கப் படைகளிடம் பின்லேடன் உடல்:
கொல்லப்பட்ட பின் லேடனின் உடல் அமெரிக்கப் படைகளிடம் பத்திரமாக உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
மேலும் இஸ்லாமாபாத்தில் நடந்த தாக்குதலில் பின்லேடன் பதுங்கியிருந்த கட்டடத்தை அமெரிக்கப் படையினர் முற்றுகையிட்டு நேரடித் தாக்குதலில் ஈடுபட்டதாகவும், ஏவுகணைத் தாக்குதல் ஏதும் நடைபெறவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதன் மூலம் பாகிஸ்தானுக்குள் பதுங்கியிருந்த லேடனை, அமெரிக்கப் படையினர் உள்ளேயே புகுந்து தரை மார்க்கமாக சந்தித்து தாக்கி அழித்துள்ளனர்.
பின்லேடனின் உடல் புகைப்படம் வழியாக உலகுக்குக் காட்டப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
லேடனைக் கொன்ற சிஐஏ ஏஜென்டுகள்:
பின்லேடனைக் கொன்றவர்கள் சிஐஏ ஏஜென்டுகள் என்று ஒசாமா தெரிவித்துள்ளார். பின்லேடன் அங்கு பதுங்கியிருப்பதை தொடர்ந்து கண்காணித்து வந்த சிஐஏ குழு, இன்று அதிகாலை அந்த இடத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து பின்லேடனின் பாதுகாவலர்களுக்கும் அமெரிக்கப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது.
இதில் ஒசாமா கொல்லப்பட்டார் என்று ஒபாமா தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் மக்கள் அதிர்ச்சி:
உலகையே குலுங்க வைத்த பயங்கரவாதியான ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானுக்குள் பதுங்கியிருப்பதாக பலமுறை அமெரிக்கா சொல்லி வந்தது. இதை பாகிஸ்தான் அரசுத் தரப்பும், ராணுவத் தரப்பும் தொடர்ந்து மறுத்து வந்தன.
ஆனால் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலேயே பின்லேடன் பதுங்கியிருந்தது பாகிஸ்தான் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தங்களுக்குப் பக்கத்திலேயே இத்தனை காலமாக பின்லேன் இருந்தது அவர்களை அதிர்ச்சியிலும், வியப்பிலும் ஆழ்த்தியுள்ளது.
மேலும் பின்லேடன் தலைநகர் இஸ்லாமாபாத்தில் தங்கியிருந்தது நிச்சயம் பாகிஸ்தான் அரசுக்கும், அதன் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும் என்று அமெரிக்கா நம்புகிறது.
மேலும் பின்லேடன் இருப்பிடம் குறித்து பாகிஸ்தான் தரப்பிலிருந்தே யாரேனும் காட்டிக் கொடுத்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
கடந்த வாரம் கொல்லப்பட்டார்:
பின் லேடன் கடந்த வாரம் இஸ்லாமாபாத்தில் கொல்லப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க உளவுத் துறை கொடுத்த தகவலின்படி நடந்த தாக்குதலில் ஒசாமா கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் அமெரிக்காவிடம் இருப்பதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
ஒசாமா பாகிஸ்தான்-ஆப்கானி்ஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள மலையில் தான் இத்தனை நாட்களாக பதுங்கி இருந்ததாக அதிகாரிகள் நம்பினர்.
நியூயார்க் மற்றும் வாஷிங்டனில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பிறகு மேற்கத்திய நாடுகள் ஒசாமாவை வலை வீசித் தேடி வந்தன.
செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள் நடந்து பத்து ஆண்டு நிறைவடைய இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் ஒசாமா கொல்லப்பட்டுள்ளார்.
இந்த இரட்டை தாக்குதல்களுக்குப் பிறகு அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்குடன் போர் புரிந்தது. வரும் காலத்தில் இது போன்று தாக்குதல்கள் நடக்காமல் தடுக்க உளவுத்துறையை சீரமைத்தது.
கடந்த 1998-ம் ஆண்டு ஆப்பிரிக்காவில் உள்ள 2 அமெரிக்க தூதரகங்கள் தகர்க்கப்பட்டதில் 231 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு அல் கொய்தா தான் காரணம் என்று கூறப்பட்டது. இது தவிர மேலும் பல தாக்குதல்களுக்கும் அல் கொய்தா மீது குற்றம் சாட்டப்பட்டது.
ஈமான் அல் ஜவாஹிரியின் கதி என்ன?
பின்லேடனுடன் எப்போதும் உடன் இருந்தவர் அல் கொய்தாவின் துணைத் தலைவரான ஈமான் அல் ஜவாஹிரி. பின் லேடன் வேட்டையின்போது அவரும் உடன் இருந்தாரா, அவரது கதி என்ன என்பது குறித்துத் தெரியவில்லை.
பின்லேடன் வேட்டை குறித்து அதிபர் ஒபாமா மேலும் கூறுகையில், இஸ்லாமாபாத் அருகே உள்ள அப்போடாபாத் என்ற இடத்தில் பின்லேடன் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை தகவல்கள் உறுதிபடத் தெரிவித்தன. இதையடுத்து அந்தப் பகுதியில் உள்ள ஒரு இடத்தை அமெரிக்கப் படையினர் தீவிரமாக கண்காணிக்கத் தொடங்கினர்.
பின்லேடன் அங்கு தங்கியிருப்பது உறுதியானதைத் தொடர்ந்து அங்கு புகுந்து தாக்குதல் நடத்தி பின்லேடனைக் கொல்லுமாறு உத்தரவிட்டேன். இதையடுத்து சிறிய அமெரிக்கப் படைக் குழு அங்கு புகுந்தது. இதையடுத்து அங்கிருந்த தீவிரவாதிகளுக்கும், அமெரிக்கப் படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சூடு நடந்தது. இதன் இறுதியில் பின்லேடன் கொல்லப்பட்டார். பின்லேடனின் உடலை படையினர் கைப்பற்றி விட்டனர் என்றார்.
அமெரிக்கர்கள் உற்சாகம்:
பின்லேடன் கொல்லப்பட்ட தகவலை அதிபர் ஒபாமா வெளியிட்டதைத் தொடர்ந்து அமெரிக்கர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். வெள்ளை மாளிகைக்கு வெளியே கூடி அவர்கள் உற்சாகமாக குரல் எழுப்பிக் கொண்டாடினர்.
இஸ்லாமாபாத்திலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் ..
பின்லேடன் கொல்லப்பட்ட இடம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
அந்த இடத்தின் பெயர் அப்போடாபாத். இது இஸ்லாமாபாத்திலிருந்து 2 மணி நேர தொலைவில் உள்ளது. கல்வி நிறுவனங்களுக்குப் பெயர் போனது இந்த நகரம். மேலும் இந்தப் பகுதியில் பல தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகள் சுதந்திரமாக செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானின் மிகச் சிறந்த சுற்றுலாத்தளமும் இது என்பது குறிப்பிடத்தக்கது.
Read: In English
இங்குள்ள ஒரு மேன்சனில் தனது குடும்பத்தோடு வசித்து வந்துள்ளார் பின்லேடன். இங்கு தங்கியிருந்த பெண்களும், குழந்தைகளும் பத்திரமாக மீட்கப்பட்டு அமெரிக்கப் படையினரிடம் சிக்கியுள்ளனர். இவர்கள் பின்லேடன் குடும்பத்தினரா என்பது தெரியவில்லை.
இந்தப் பகுதியில் தாக்குதல் நடந்தபோது பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. மூன்று குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகவும் அக்கம் பக்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
hhhhhhhhhh
அல்லாஹ மட்டுமே அனைத்தும் அறிந்தவன்.இஸ்லாத்தை அழிக்க எடுக்கும் அணைத்து முயற்சியும் அல்லாஹ்வால் முரியடிகபடும்,அல்லாஹ குரானில் சொன்னபடி இஸ்லாமிய சாம்ராஜ்யம் உருவாகும் .மிக குருஹிய காலத்துக்குள்.அதுவரை அல்லாஹ்வின் பெயரை கொண்டு அமைதி கொள்வோம்.அல்லாஹு அக்பர்