புதுடில்லி: தி.மு.க., தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதியின் மகள் கனிமொழி டில்லியில் உள்ள சி.பி.ஐ.,சிறப்பு கோர்ட்டில் ஆஜராக தமிழக எம்.பி.,க்கள் புடைசூழ வந்தார்.
அவர் வருவதையொட்டி கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட வேண்டிய ஆவணங்களுடன் சி.பி.ஐ., அதிகாரிகள் தயாராக உள்ளனர்.
2. ஜி ஸ்பெக்டரம் விவகாரத்தில் பயனடைந்த டிபி., ரியாலிட்டி குழுமத்தில் இருந்து கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு ரூ. 214 கோடி பரிமாற்றம் என்பதுதான் கனிமொழிக்கு வந்தது ஆபத்து ரூபம். இந்த தொலைக்காட்சி நிறுவனத்தில் கனிமொழி 20 சத பங்குதாரர். ரூ. 214 கோடி கடனாக பெறப்பட்டு திருப்பி வழங்கப்பட்டதற்கான ஆவணங்கள் இருக்கிறது என இவரது தரப்பில் கூறப்பட்டாலும், சி.பி.ஐ., இதனை முழுச்சந்தேக பார்வையில் விசாரணை நடத்தி கடந்த சில நாட்களுக்கு முன்னர் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் கனிமொழி கூட்டுச்சதியாளர் என்று கோடு இட்டிருக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக பலமுனை விசாரணைகள் முடிந்து விட்ட போதிலும் இன்று சி.பி.ஐ., கோர்ட்டில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதன்படி இவர் கோர்ட்டில் ஆஜராக தி.மு.க.,வின் நம்பிக்கை நட்சத்திரங்களாக திகழும் எம்.பி.,க்கள் குழுவினர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சகிதமாக புதன்கிழமையே டில்லி வந்து சேர்ந்தார்.
இன்று ( வெள்ளிக்கிழமை) காலை கோர்ட்டுக்கு புறப்பட்டு சென்றார். இவருடன் தி.மு.க., எம்.பி.,க்கள் 5 பேர் சென்றுள்ளனர். ஆவணங்களுடன் தயாராக இருக்கும் சி.பி.ஐ., அதிகாரிகள் கோர்ட்டில் தெரிவிக்கும் கருத்தின் அடிப்படையில் கனிமொழி மீது இன்றைய நடவடிக்கை இருக்கும். ஒன்று, இவரிடம் தொடர் விசாரணை நடத்த சி.பி.ஐ., விரும்பும் பட்சத்தில் கஸ்டடிக்கு கோர்ட் அனுப்புமா அல்லது ஜாமீன் வழங்குமா என்பது தற்போதைய நிலவரம். இதற்கு முன்னதாக ஆஜரான, மாஜி அமைச்சர் ராஜா, பிரபல கார்ப்ரேட் நிறுவனங்களின் முக்கியஸ்தர்கள் என பலர் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்னர்.
நான் எந்தவொரு கடும் நடவடிக்கையையும் சந்திக்க தயாராக இருக்கின்றேன்,. சட்டம் கோர்ட் என்ன சொல்கிறதோ அதனை ஏற்பேன். ஜாமீன் பெறவேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை என கனிமொழி முன்னதாக அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.
Leave a Reply