துபாய் : அல்குவைதா பயங்கரவாத
தலைவன் ஒசாமா பின் லேடனை அமெரிக்க படைகள் சுட்டு வீழ்த்தின. ஒசாமாவுக்கு பிறகு ஜவாஷிரி அல்குவைதா தலைவர் பதவியை ஏற்பார் என கூறப்பட்டது.
இந்நிலையில் சவுதியில் இருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்றில் அமெரிக்காவுக்கு ஒசாமா இருப்பிடத்தை காட்டிக் கொடுத்தது ஜவாஹிரி என கூறப்பட்டுள்ளது. கடந்த 2004ம் ஆண்டு முதல் ஜவாஹிரிக்கும் – ஒசாமாவுக்கும் இடையே தலைவர் பதவி தொடர்பாக சர்ச்சை நிலவி வந்ததாகவும், எனவே இந்த சர்ச்சையின் காரணமாக ஒசாமா இருப்பிடம் குறித்து ஜவாஹிரி தகவல் கொடுத்திருக்கலாம் என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Leave a Reply