கால்நடை மருத்துவப் படிப்பிற்கான விண்ணப்பங்கள், நேற்று முதல் வினியோகிக்கப்பட்டன. இந்தாண்டு புதிததாக ஆரம்பிக்கப்படும், கோழியின உற்பத்தி தொழில்நுட்ப நான்காண்டு பட்டப்படிப்பில், 20 மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளனர்.
கால்நடை மருத்துவம், மீன்வளம், உணவு பதனிடும் தொழில் நுட்பம் மற்றும் கோழியின உற்பத்தி தொழில்நுட்பப் பட்டப்படிப்புகளில், 2011-12 ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள், நேற்று வினியோகிக்கப்பட்டன.
சென்னை மற்றும் நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி, தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் மதுரை, கோவை, திருச்சி, ராஜபாளையம், வேலூர் ஆகிய இடங்களில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையங்களில் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டன.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, ஜூன் 7 மாலை 5.45 க்குள், மாணவர்கள் சமர்ப்பிக்க வேண்டும். இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு, இளநிலை மீன்வள பட்டப்படிப்புகளில் சேர்க்கைக்காக உள்ள மொத்த இடங்கள் தவிர, அயல்நாடு வாழ் இந்தியர், அயல்நாட்டினர் மற்றும் காஷ்மீர் மாநிலத்திலிருந்து இடம் பெயர்ந்தவர்களுக்காக, இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கோழியின உற்பத்தி தொழில்நுட்பம் (பி.டெக்., பி.பி.டி.,) குறித்த நான்காண்டு பட்டப்படிப்பு, இந்தாண்டு முதல் துவக்கப்படுகிறது. இந்த பட்டப்படிப்பிற்கு கணிதம், உயிரியல், வேதியியல் மற்றும் இயற்பியல் படித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில், 20 மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். தரவரிசைப் பட்டியல் ஜூன் மூன்றாம் வாரத்தில் வெளியிடப்படுகிறது. கலந்தாய்வு ஜூலை 13 மற்றும் 14ம் தேதிகளில் நடக்கிறது. புதிய படிப்பு மற்றும் வழிமுறைகள் குறித்த இதர விவரங்களை, www.tanuvas.tn.nic.in என்ற பல்கலை இணையதளம் அல்லது 044-25551586, 25551587 என்ற தொலைபேசி எண்களில் அல்லது நேரிலோ சென்று அறிந்து கொள்ளலாம்.
MGR Anbu
தங்கள் தகவலுக்கு மிகவும் நன்றி