கெய்ல் புயலில் வீழ்ந்தது பஞ்சாப் அணி

பெங்களூரு: ஐ.பி.எல்., லீக் போட்டியில் “சிக்சர் மழை’ பொழிந்த பெங்களூரு அணியின் கெய்ல், சதம் விளாசி அசத்தினார்.


இவரது அதிரடி “புயலில்’ சிக்கிய பஞ்சாப் அணி, தொடர்ந்து நான்காவது தோல்வியை பதிவு செய்தது.
நான்காவது ஐ.பி.எல்., தொடரின் 47வது லீக் போட்டி, பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடந்தது. இதில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. “டாஸ்’ வென்ற பஞ்சாப் கேப்டன் கில்கிறிஸ்ட், பீல்டிங் தேர்வு செய்வது என தவறான முடிவு எடுத்தார்.
மீண்டும் ஏமாற்றம்:
பெங்களூரு அணிக்கு வழக்கம் போல தில்ஷனுடன் இணைந்து, கிறிஸ் கெய்ல் துவக்கம் கொடுத்தார். விரைவில் இங்கிலாந்து கிளம்பவுள்ள தில்ஷன், 16 ரன்னுக்கு அவுட்டாகி, மீண்டும் ஏமாற்றம் தந்தார்.
சிக்சர் மழை:
மறு முனையில் கெய்ல், அதிரடியில் வாண வேடிக்கை காட்டினார். ஹாரிஸ் ஓவரில் அடுத்தடுத்து சிக்சர் விளாசிய இவர், பிரவீண் குமாரையும் விட்டுவைக்கவில்லை. இவரது ஓவரில் தொடர்ந்து 2 சிக்சர் அடித்த கெய்ல், 2 பவுண்டரியும் விளாசி மிரட்டினார். சாவ்லா ஓவரிலும் தொடர்ந்து சிக்சர் மழை பொழிந்தார்.
அதிரடி சதம்:
பின் அபிலிஷ் வீசிய ஓவரில், “ஹாட்ரிக்’ உட்பட, நான்கு பவுண்டரிகள் அடித்தார். தொடர்ந்து அசத்திய இவர், மெக்லாரென் ஓவரில் தலா ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்து, 46 வது பந்தில் இத்தொடரின் இரண்டாவது சதத்தை எட்டினார். இந்நிலையில் சாவ்லா சுழலில், 107 ரன்கள் எடுத்த (49 பந்துகள், 10 பவுண்டரி, 9 சிக்சர்) கெய்ல் வீழ்ந்தார். அடுத்த பந்தில் விராத் கோஹ்லியும் (27) போல்டானார்.
இமாலய இலக்கு:
கடைசி நேரத்தில் சவுரப் திவாரி (13), ஆசாத் பதான் (0), கைப் (3) மூவரும், ரன்எடுக்கும் வேகத்தில், விரைவில் திரும்பினர். ஆனால் டிவிலியர்ஸ் பவுண்டரி, சிக்சர்களாக அடித்து, ரன்வேகம் குறையவிடாமல் பார்த்துக்கொண்டார்.
20 ஓவரின் முடிவில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி, 6 விக்கெட்டுக்கு 205 ரன்கள் எடுத்தது. டிவிலியர்ஸ் (27), மிதுன் (6) அவுட்டாகாமல் இருந்தனர். பஞ்சாப் சார்பில் ஹாரிஸ் 3, பியுஸ் சாவ்லா 2 விக்கெட் கைப்பற்றினர்.
விக்., மட, மட…
மிக கடினமான இலக்கை விரட்டிய பஞ்சாப் அணிக்கு, கில்கிறிஸ்ட் முதல் பந்திலேயே, ரன் எதுவும் எடுக்காமல், ரன் அவுட்டாகி சரிவைத் துவங்கி வைத்தார். அபிஷேக் நாயர் ஒரு ரன்னில் வெளியேறினார். அணியை மீட்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வல்தாட்டியும் (21), ஜாகிர் கான் ஓவரில் “ஹாட்ரிக்’ பவுண்டரி அடித்த திருப்தியுடன் திரும்பினார்.
மார்ஷ் ஏமாற்றம்:
அதிரடி மார்ஷ் (4) தன்பங்கிற்கு அணியை கைவிட்டார். சற்று நேரம் தாக்குப்பிடித்த தினேஷ் கார்த்திக்கும் (20) பாதியில் திரும்பினார். சன்னி சிங் (4), பியுஸ் சாவ்லா (5) இருவரும் நிலைக்கவில்லை.
பஞ்சாப் தோல்வி:
அடுத்து இணைந்த மெக்லாரென் (28), ஹாரிஸ் (17) ஜோடி சற்று போராட்டத்தை வெளிப்படுத்தினர். கடைசி நேரத்தில் பிரவீண் குமார் (15*) அதிரடி காட்டிய போதும், அணியை தோல்வியில் இருந்து காப்பாற்ற முடியவில்லை.
20 ஓவரின் முடிவில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, 9 விக்கெட்டுக்கு, 120 ரன்கள் மட்டும் எடுத்து, 85 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
பேட்டிங், பவுலிங்கில் (3 விக்.,) அசத்திய கெய்ல், ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

இரண்டாவது சதம்
ஒரு ஐ.பி.எல்., தொடரில் இரண்டு சதத்தை, பதிவு செய்த முதல் வீரர் என்ற பெருமை பெற்றார் பெங்களூரு அணியின் கிறிஸ்கெய்ல். கோல்கட்டா அணிக்கு எதிரான போட்டியில் 102 ரன்கள் எடுத்த இவர், நேற்று பஞ்சாப் அணிக்கு எதிராக 107 ரன்கள் எடுத்து அசத்தினார்.

ஸ்கோர்போர்டு
பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்
கெய்ல்(கே)ஹாரிஸ்(ப)சாவ்லா 107(49)
தில்ஷன்(கே)பிரவீண்(ப)மெக்லாரென் 16(9)
கோஹ்லி(ப)சாவ்லா 27(31)
டிவிலியர்ஸ்-அவுட் இல்லை- 27(14)
திவாரி(கே)+(ப)ஹாரிஸ் 13(9)
ஆசாத்-எல்.பி.டபிள்யு(ப)ஹாரிஸ் 0(1)
கைப்(ப)ஹாரிஸ் 3(4)
மிதுன்-அவுட் இல்லை- 6(3)
உதிரிகள் 6
மொத்தம் (20 ஓவரில், 6 விக்.,) 205
விக்கெட் வீழ்ச்சி: 1-43(தில்ஷன்), 2-154(கிறிஸ் கெய்ல்), 3-155(விராத் கோஹ்லி), 4-186(சவுரப் திவாரி), 5-186(ஆசாத் பதான்), 6-198(முகமது கைப்).
பந்து வீச்சு: பிரவீண் குமார் 4-0-37-0, ஹாரிஸ் 4-1-38-3, மெக்லாரென் 4-0-40-1, அபிலிஷ் 3-0-39-0, பியுஸ் சாவ்லா 4-0-37-2, அபிஷேக் நாயர் 1-0-9-0.
கிங்ஸ் லெவன் பஞ்சாப்
கில்கிறிஸ்ட்-ரன் அவுட்(ஆசாத்) 0(1)
வல்தாட்டி(கே)மிதுன்(ப)கெய்ல் 21(16)
நாயர்(கே)திவாரி(ப)அரவிந்த் 1(4)
மார்ஷ்(கே)+(ப)அரவிந்த் 4(8)
கார்த்திக்-எல்.பி.டபிள்யு(ப)கெய்ல் 20(15)
சன்னி சிங்(கே)ஆசாத்(ப)வெட்டோரி 4(5)
மெக்லாரென்(ப)அரவிந்த் 28(32)
சாவ்லா(ப)கெய்ல் 5(6)
ஹாரிஸ்(கே)ஆசாத்(ப)அரவிந்த் 17(25)
பிரவீண்-அவுட் இல்லை- 15(7)
அபிலிஷ்-அவுட் இல்லை- 0(2)
உதிரிகள் 5
மொத்தம் (20 ஓவரில், 9 விக்.,) 120
விக்கெட் வீழ்ச்சி: 1-0(கில்கிறிஸ்ட்), 2-5(நாயர்), 3-28(வல்தாட்டி), 4-34(மார்ஷ்), 5-50(சன்னி சிங்), 6-57(தினேஷ் கார்த்திக்), 7-67(பியுஸ் சாவ்லா), 8-104(மெக்லாரென்), 9-105(ஹாரிஸ்).
பந்துவீச்சு: ஜாகிர் கான் 4-0-35-0, அரவிந்த் 4-0-15-4, கெய்ல் 4-0-21-3, மிதுன் 3-0-29-0, வெட்டோரி 4-0-14-1, விராத் கோஹ்லி 1-0-7-0.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *