சென்னை : “சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டு முதல், 200 இடங்களை கூடுதலாக்க ஆய்வு நடந்து வருகிறது’ என, அமைச்சர் விஜய் கூறினார்.
புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, சென்னை அரசு மருத்துவமனையில், விழிப்புணர்வு மனிதச் சங்கிலி நேற்று நடந்தது. சுகாதாரத் துறை அமைச்சர் விஜய் பங்கேற்று, மனிதச் சங்கிலியை துவக்கி வைத்தார். மருத்துவக் கல்லூரி டீன் கனகசபை, கண்காணிப்பாளர் பழனி மற்றும் டாக்டர்கள், நர்சுகள் என, 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அமைச்சர் விஜய் நிருபர்களிடம் கூறும்போது,”புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே, மனிதச் சங்கிலி நடத்தப்பட்டு வருகிறது. சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டு முதல், 200 இடங்களை கூடுதலாக்குவது குறித்து இந்திய மருத்துவ கவுன்சில் ஆய்வு செய்து வருகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது’ என்றார்.
Leave a Reply