சென்னை: தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ 192 உயர்ந்தது.
சென்னையில் தங்கத்தின் விலை நேற்று முன்தினம் பவுன் ரூ 16568க்கு விற்கப்பட்டது. சீஸன் இல்லாததால், இன்னும் விலை குறையும் என்று வியாபாரிகள் கூறிவந்தனர்.
ஆனால் அவர்களின் கணிப்புக்கு மாறாக, தங்கத்தின் விலை நேற்று மட்டும் சவரனுக்கு ரூ 192 வரை உயர்ந்தது. இதனால் ஒரு பவுன் ரூ.16 ஆயிரத்து 760-ஆக உயர்ந்தது தங்கம் விலை.
ஒரு கிலோ வெள்ளி ரூ 53165-க்கு விற்பனையானது.
Leave a Reply