மதுரை : திருச்சியில் பெண் தற்கொலை செய்த வழக்கில் முன்ஜாமின் கோரி கணவர் உட்பட மூவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட் கிளை, வழக்கு ஆவணங்களுடன் மே 25ல் நேரில் ஆஜராகும்படி கன்டோன்மென்ட் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட்டது.
திருச்சி கன்டோன்மென்ட்டை சேர்ந்தவர் லிங்கசிவா. இவரது மனைவி ஜெயந்தி சில மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து, லிங்கசிவா, தந்தை கோபால், தாய் முனியம்மாள் மீது வழக்கு பதிவு செய்தனர். வழக்கில் முன்ஜாமின் கோரி மூவரும் ஐகோர்ட் கிளையில் வக்கீல் சங்கர்கணேஷ் மூலம் மனு செய்தனர். மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போதும், போலீஸ் அதிகாரிகள் ஆஜராகவில்லை. மனுவை விசாரித்த நீதிபதி ஏ.செல்வம், வழக்கு குறித்த ஆவணங்களுடன் கன்டோன்மென்ட் இன்ஸ்பெக்டர் மே 25ல் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார். தவறினால் கோர்ட் தாமாக முன்வந்து அவமதிப்பு நடவடிக்கை எடுக்கும் எனவும் எச்சரித்தார்.
Leave a Reply