கோல்கட்டா : மேற்கு வங்க மாநிலம், சிங்கூரில் இருந்து, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், டாடாவின் நானோ கார் தொழிற்சாலை விரட்டியடிக்கப்பட்டது.
தற்போது மீண்டும் கோல்கட்டாவில், இரண்டு ஆண்டுகளில், இரண்டு ஓட்டல்களை நிறுவும் திட்டத்துடன் டாடா நிறுவனம் காலடி வைக்கிறது. கோல்கட்டாவில், ஏற்கனவே வர்த்தக ரீதியில், கேட்வே ஐந்து நட்சத்திர ஓட்டல் கட்டப்பட்டு வருகிறது. தாஜ் குரூப் ஓட்டலை அடுத்து, இரண்டாவது ஓட்டலாக, கோல்கட்டாவில் இந்த ஐந்து நட்சத்திர ஓட்டல் கட்டப்பட்டு வருகிறது. கிழக்கு மண்டலத்தில் முதன் முதலாக, கோல்கட்டா வாயிலாக, கேட்வே ஓட்டல் காலடி எடுத்து வைக்கிறது.
கோல்கட்டாவில், ராஜர்ஹட் நியூ டவுன் பகுதியில், டாடா மருத்துவ மையத்தில், ஜிஞ்ஜர் ஓட்டல் கட்டுவதற்கான ஏற்பாடுகளை டாடா நிறுவனம் செய்து வருகிறது. இந்த மருத்துவ மையத்தில், மருத்துவ வசதிகளை ஏற்படுத்துவதற்காக, சமீபத்தில் ரத்தன் டாடா வந்திருந்தார். சிங்கூரில், நானோ கார் திட்டம் கைவிடப்பட்ட பின், முதன் முதலாக, கடந்த திங்கள் கிழமை, இந்த மருத்துவ மையத்தில், மருத்துவ வசதிகளை துவக்கி வைப்பதற்காக, ரத்தன் டாடா வந்திருந்தார். ஓட்டல் கட்டுவதற்கான முதலீட்டை ஜலான் நிறுவனம் வழங்கும். தாஜ் குரூப் ஓட்டல் நிர்வாகத்தை மேற்கொள்ளும்.
Leave a Reply