அல்கொய்தா தீவிரவாத தலைவன் பின்லேடன் அமெரிக்க படைகளால் பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டான். இதுகுறித்து மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் கருத்து தெரிவித்து உள்ளார். அவர் கூறியதாவது:-
உலக பயங்கரவாதியான ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் கொல்லப்பட்டதன் மூலம் தீவிரவாதிகள் பதுங்கிடமாக பாகிஸ்தான் உள்ளது என்பது நிருபனமாகி உள்ளது. பல்வேறு தீவிரவாத குழுக்களின் சரணாலயமாக பாகிஸ்தான் திகழ்கிறது. இது கவலை அளிப்பதாகும்.
பின்லேடன் பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டதன் மூலம் மும்பையில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருப்பது உறுதியாகி விட்டது. தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து அடைக்கலம் கொடுத்து வருகிறது.
மும்பை தாக்குதல் சம்பவத்துக்கு காரணமாக பயங்கரவாதிகளை இந்தியாவிடம் பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
Leave a Reply