பிஎஸ்என்எல் டேட்டா கார்டு விலை ரூ 1000 வரை குறைப்பு

சென்னை: பி.எஸ்.என்.எல். டேட்டா கார்டு (இன்டர்நெட்) விலை கடந்த மே 20 முதல் ரூ 1499 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பி.எஸ்.என்.எல். துணை பொது மேலாளர் எம்.மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

3ஜி யு.எஸ்.பி. போர்ட் ஹச்.எஸ்.டீ.பி. டேட்டா கார்டு 3.6 எம்.பீ.பி.எஸ்.சிங்கிள் பேண்ட் ரூ.2 ஆயிரத்திலிருந்து ரூ.1600 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. வாட் வரி 4% தனி.

3ஜி யு.எஸ்.பி. போர்ட் ஹச்.எஸ்.டீ.பி. டேட்டா போர்டு 7.2 எம்.பீ.பி.எஸ். ட்ரை பேண்ட் ரூ.2500-லிருந்து ரூ.2 ஆயிரமாகக் குறைக்கப்பட்டுள்ளது. வாட் வரி 4% தனி.

ஈ.வி.டி.ஒ. கார்டு ரூ.2500-லிருந்து ரூ.1,499 (அதிகபட்ச சில்லரை விலை) ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *