பிளஸ் 2 முடித்தவர்கள் ஆன்லைன் மூலம் வேலை வாய்ப்பு பதிவினை பள்ளிகளிலேயே மேற்கொள்வதால், பதிவு மூப்பில் குளறுபடி ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
மாநில அளவில் 6,15,593 மாணவர்கள் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றனர். இவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவதற்காக, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பல மணி நேரம் காத்திருப்பர். ஒரே நாளில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பதிவதற்கு செல்வதால், அங்கு தள்ளுமுள்ளு ஏற்படும்.
இதை தவிர்க்க மதிப்பெண் சான்று பெற்றவுடன், பள்ளியிலேயே வேலை வாய்ப்பு பதிவை ஆன்லைனில் மேற்கொள்ளலாம் என, வேலைவாய்ப்பு துறை அறிவித்துள்ளது. இதற்காக பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண் சான்று மே 25 முதல் வழங்கப்படும். அன்று முதல் ஜூன் 8 வரை பள்ளியிலேயே ஆன்லைனில் பதிவு செய்யலாம்.
இது போன்று ஆன்லைனில் பதிவு செய்தால், சீனியாரிட்டி எண் எப்படி வழங்கப்படும். இதனால், முதல் நாள் பதிவு செய்தவர்கள் சீனியாரிட்டி பட்டியலில் முதலில் இருப்பர்.
பின்னால் சென்றால், சீனியாரிட்டி பாதிக்கும் என்ற காரணத்தால், பள்ளிகளில் ஒரே நாளில் பதிவு செய்ய மாணவர்கள் முன்வருவர். இதனால், அங்கும் நெரிசல், தள்ளுமுள்ளு ஏற்படும்.
வேலைவாய்ப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பள்ளிகளில் மே 25 முதல் ஜூன் 8 வரை பதிய பிளஸ் 2 மாணவர்களுக்கு கால அவகாசம் தந்துள்ளோம். இந்த 15 நாட்களில் பதியும் மாணவர்கள் அனைவரும் ஒரே சீனியாரிட்டி லிஸ்டில் தான் இருப்பர். சீனியாரிட்டி எண் தருவதில்லை. மாறாக ஒரே சீனியாரிட்டி (2011 மே 25) நாள் கணக்கிடப்படும். இவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில், அவர்களின் பிறந்த தேதி மூப்பு, பெயர் வரிசைப்படி சீனியாரிட்டி பட்டியல் தருவோம். இதனால், குளறுபடிக்கு வாய்ப்பில்லை என்றார்.
Leave a Reply