தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக, தி.மு.க. தலைவர் கருணாநிதி, தனது சொந்த பொறுப்பில் அளித்த ஐந்து கோடி ரூபாயை வங்கியில் வைப்பு நிதியாக போடப்பட்டு, அதில் கிடைக்கப்பெறும் வட்டித்தொகையைக் கொண்டு, மாதந்தோறும் ஏழை, எளிய நலிந்தோருக்கு உதவித்தொகையாக கடந்த 2005-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து 2007-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை வழங்கப்பட்டு வருகிறது.
வைப்பு நிதியாக போடப்பட்ட ஐந்து கோடி ரூபாயில், 30-வது புத்தகக் கண்காட்சியை 10-1-2007 அன்று திறந்து வைத்து பேசும்போது, கலைஞர் அறக்கட்டளை சார்பில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் பதிப்பாளர் சங்கத்துக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்து அந்த சங்கத்துக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட்டது.
மீதமுள்ள 4 கோடி ரூபாயில் இருந்து கிடைக்கக்கூடிய வட்டித் தொகையில் 2007-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து தொடர்ந்து உதவித் தொகை வழங்கப்படுகிறது. 2005-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து இதுவரை ஒரு கோடியே 98 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த ஏப்ரல் மாதம் வட்டியாக கிடைத்த தொகையில் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக 32 பேருக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை முதல்-அமைச்சர் கருணாநிதி நேற்று வழங்கினார். நிதி பெறுவோர் வெளி மாவட்டங்களில் இருந்து வந்துபோகிற செலவினத்தை தவிர்ப்பதற்காக தபால் மூலம் வரைவுக் காசோலையாக அனுப்பப்படுகிறது.
நிதி உதவி பெறுவோர் விவரம் வருமாறு:- கே.குப்புசாமி, மங்கம்மாள் தோட்டம் முதல் தெரு, புது வண்ணாரபேட்டை, வடசென்னை. லட்சுமி கிருஷ்ணன், அம்மையப்பன் சந்து, ராயப்பேட்டை, தென்சென்னை, கே.நீலகண்டன், உ.வே.சாமிநாத அய்யர் தெரு, ராஜாஜிபுரம் திருவள்ளூர், அ.குப்புசாமி, பாண்டவ பெருமளர் கோவில் சன்னதி தெரு, பெரிய காஞ்சிபுரம், கே.சாந்தி, மாரியம்மன் கோவில் தெரு, காரை, ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டம், சி.கிருஷ்ணன், கரைப்பூண்டி, போளூர், திருவண்ணாமலை மாவட்டம்.
பி.கோவிந்தராஜன், அசோகபுரி, கஞ்சனூர், விக்கிரவாண்டி, விழுப்புரம் மாவட்டம், சி.பழனிமுத்து, வையங்குடி, மங்களூர், திட்டக்குடி, கடலூர் மாவட்டம், ப.தியாகராஜன், விக்ரமம், மதுக்கூர்,பட்டுக்கோட்டை, தஞ்சை மாவட்டம், சா.கல்யாணசுந்தரம், பிரதாபராபுரம், கீழையூர், கீவளூர், நாகை மாவட்டம்.
கு.கோவிந்தராசு, 14, பெரம்பூர் ஊராட்சி, நீடாமங்கலம், திருவாரூர் மாவட்டம், ஏ.கே.சிக்கந்தர், பொன்னப்பட்டி, மணப்பாறை, திருச்சி மாவட்டம், ப.தனபாக்கியம், கண்டிராதித்தம், திருமானூர், அரியலூர் மாவட்டம், எம்.முகம்மது நெய்னா, வடக்கு அம்மாப்பட்டினம், மணமேல்குடி, புதுக்கோட்டை மாவட்டம், எம்.தங்கவேலு, வெள்ளாளகுண்டம்,வாழப்பாடி, சேலம் மாவட்டம், கே.சீமான், மின்னாம்பள்ளி, மல்லசமுத்திரம், நாமக்கல் மாவட்டம்.
பி.தேவராஜி, மாதேஅள்ளி, பாப்பாரப்பட்டி, பென்னாகரம், தர்மபுரிமாவட்டம், து.கோவிந்தராஜ், பில்லனகுப்பம், வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம், சி.பழனி, தெலுங்குபாளையம் காலனி, அன்னூர் ஒன்றியம், கோவை மாவட்டம், இரா.கிருட்டிணன், முத்துசெட்டிபாளையம், அவிநாசி, திருப்பூர் மாவட்டம்.
கே.பாப்பாத்தி, ஊத்துக்குளி ரோடு, மேலப்பாளையம், சென்னிமலை, ஈரோடு மாவட்டம், ம.குமார் என்ற குமாரவேல், பொன்னூர் காலனி, கூடலூர், நீலகிரி மாவட்டம், எஸ்.எம்.நாகூர்கனி, காயிதே மில்லத் நகர் 4-வது தெரு, மதுரை-625001, எம்.செல்லையா, தே.பொம்மிநாயக்கன்பட்டி, தேவாரம், தேனி மாவட்டம், ப.சண்முகம், இடையகோட்டை, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் மாவட்டம்.
அ.பூமிநாதன், மறக்குளம், வலையபூக்குளம், கமுதி, ராமநாதபுரம் மாவட்டம், பெரி.ராமையா, முத்தூர், கீழச்சிவல்பட்டி, திருப்பத்தூர், சிவகங்கை மாவட்டம், எஸ்.கோட்டமலை, கூமாப்பட்டி, வத்திராயிருப்பு, விருதுநகர் மாவட்டம், மா.காசிப்பாண்டியன், நடுவக்குறிச்சி, மேலநீலிதநல்லூர், சங்கரன்கோவில், திருநெல்வேலி மாவட்டம், க.சுப்புலட்சுமி, சத்திரப்பட்டி, இடைசெவல், கோவில்பட்டி, தூத்துக்குடி மாவட்டம், பி.தாசையன், தெற்றிவிளைவீடு, அருமனை, விளவங்கோடு, கன்னியாகுமரி மாவட்டம், எம்.கே.கைலாசம், ஏகாம்பரகுப்பம், நகரி மண்டலம், சித்தூர், ஆந்திர மாநிலம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
Leave a Reply