மும்பை: ஐ.பி.எல்., லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் புனே வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது.
பேட்டிங், பவுலிங்கில் சோபிக்கத்தவறிய யுவராஜ் அணி, தொடர்ந்து ஏழாவது தோல்வியை பதிவு செய்தது.
இந்திய மண்ணில், நான்காவது ஐ.பி.எல்., “டுவென்டி-20′ கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று மும்பையில் உள்ள டி.ஒய். படேல் மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் புனே வாரியர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. “டாஸ்’ வென்ற புனே அணி கேப்டன் யுவராஜ் சிங், “பீல்டிங்’ தேர்வு செய்தார்.
கங்குலி இல்லை:
புனே அணியில் புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி நேற்று களமிறக்கப்படவில்லை.
“டாப்-ஆர்டர்’ ஏமாற்றம்:
முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பிளிஜார்டு (6) மோசமான துவக்கம் அளித்தார். பின் இணைந்த கேப்டன் சச்சின், அம்பதி ராயுடு ஜோடி பொறுப்புடன் ரன் சேர்த்தது. இரண்டாவது விக்கெட்டுக்கு 40 ரன்கள் சேர்த்த போது, யுவராஜ் சுழலில் சச்சின் (24) சிக்கினார். இவருக்கு ஒத்துழைப்பு அளித்த அம்பதி (27) நிலைக்கவில்லை. அடுத்து வந்த ரோகித் சர்மா (12), சைமண்ட்ஸ் (3) பெரிய அளவில் சோபிக்கவில்லை.
சுமன் அபாரம்:
“மிடில்-ஆர்டரில்’ களமிறங்கிய சுமன், அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்தார். ஜெசி ரைடர், ஜெரோம் டெய்லர், தாமஸ் பந்தில் தலா ஒரு “சிக்சர்’ விளாசிய சுமன், 16 பந்தில் 36 ரன்கள் (3 சிக்சர், 3 பவுண்டரி) எடுத்து கைகொடுத்தார். மறுமுனையில் அதிரடி காட்டிய போலார்டு, தன்பங்கிற்கு இரண்டு “சிக்சர்’ அடிக்க, மும்பை அணியின் ஸ்கோர் உயர்ந்தது. ஜெரோம் டெய்லர் வீசிய ஆட்டத்தின் கடைசி பந்தில் “சிக்சர்’ அடிக்க முயன்ற போலார்டு (29), யுவராஜ் சிங்கிடம் “கேட்ச்’ கொடுத்து அவுட்டானார்.
மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 160 ரன்கள் எடுத்தது. ஹர்பஜன் (8) அவுட்டாகாமல் இருந்தார். புனே அணி சார்பில் ஜெரோம் டெய்லர், யுவராஜ் சிங், ராகுல் சர்மா தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
ரைடர் “டக்’:
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய புனே வாரியர்ஸ் அணிக்கு, துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஹர்பஜன் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட ரைடர், குல்கர்ணியிடம் “கேட்ச்’ கொடுத்து “டக்-அவுட்’ ஆனார். அடுத்து வந்த ஸ்மித் (6), ஜுன்ஜுன்வாலா (10) சோபிக்கவில்லை. மலிங்கா, ஹர்பஜன் பந்தில் தலா ஒரு “சிக்சர்’ விளாசிய யுவராஜ் சிங் (20) நீண்டநேரம் நிலைக்கவில்லை.
பாண்டே அரைசதம்:
மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் வீரர் மனீஷ் பாண்டே அரைசதம் கடந்தார். இவருக்கு ராபின் உத்தப்பா ஒத்துழைப்பு அளிக்க, அணியின் ஸ்கோர் மெல்ல உயர்ந்தது. ஐந்தாவது விக்கெட்டுக்கு 42 ரன்கள் சேர்த்த போது, மலிங்கா பந்தில் “சிக்சர்’ அடிக்க முயன்ற பாண்டே (59), ரோகித் சர்மாவிடம் “கேட்ச்’ கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த மன்ஹாஸ் (0), மலிங்காவிடம் சரணடைந்தார். கடைசி ஓவரில் 33 ரன்கள் தேவைப்படநிலையில், 11 ரன்கள் மட்டுமே எடுத்த புனே அணி, 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 139 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. ரோகித் சர்மா (34) அவுட்டாகாமல் இருந்தார். மும்பை சார்பில் மலிங்கா 3 விக்கெட் வீழ்த்தினார்.
ஸ்கோர் போர்டு
மும்பை இந்தியன்ஸ்
பிளிஜார்டு (கே)உத்தப்பா (ப)தாமஸ் 6(6)
சச்சின் (கே)ரைடர் (ப)யுவராஜ் 24(24)
அம்பதி (கே)பாண்டே (ப)யுவராஜ் 27(28)
ரோகித் (கே)பாண்டே (ப)ராகுல் 12(20)
சுமன் (கே)மன்ஹாஸ் (ப)ராகுல் 36(16)
போலார்டு (கே)யுவராஜ் (ப)ஜெரோம் 29(21)
சைமண்ட்ஸ் (கே)பாண்டே (ப)ஜெரோம் 3(3)
ஹர்பஜன் -அவுட் இல்லை- 8(3)
உதிரிகள் 15
மொத்தம் (20 ஓவரில், 7 விக்.,) 160
விக்கெட் வீழ்ச்சி: 1-18(பிளிஜார்டு), 2-58(சச்சின்), 3-69(அம்பதி), 4-96(ரோகித்), 5-114(சுமன்), 6-124(சைமண்ட்ஸ்), 7-160(போலார்டு).
பந்துவீச்சு: தாமஸ் 4-0-53-1, வாக் 3-0-22-0, ஜெரோம் 4-0-34-2, யுவராஜ் 4-0-22-2, ராகுல் 4-0-7-2, ரைடர் 1-0-11-0.
புனே வாரியர்ஸ்
ரைடர் (கே)குல்கர்ணி (ப)ஹர்பஜன் 0(1)
பாண்டே (கே)ரோகித் (ப)மலிங்கா 59(47)
ஸ்மித் (கே)பிளிஜார்டு (ப)முனாப் 6(12)
ஜுன்ஜுன்வால் (கே)அம்பதி (ப)போலார்டு 10(15)
யுவராஜ் (கே)முனாப் (ப)மலிங்கா 20(16)
உத்தப்பா -அவுட் இல்லை- 34(26)
மன்ஹாஸ் (கே)+(ப)மலிங்கா 0(1)
வாக் -ரன் அவுட்-(அம்பதி) 0(1)
ராகுல் -அவுட் இல்லை- 0(1)
உதிரிகள் 10
மொத்தம் (20 ஓவரில், 7 விக்.,) 139
விக்கெட் வீழ்ச்சி: 1-0(ரைடர்), 2-17(ஸ்மித்), 3-46(ஜுன்ஜுன்வாலா), 4-77(யுவராஜ்), 5-119(பாண்டே), 6-128(மன்ஹாஸ்), 7-139(வாக்).
பந்துவீச்சு: ஹர்பஜன் 3-1-17-1, முனாப் 4-0-30-1, குல்கர்ணி 4-0-20-0, மலிங்கா 4-0-25-3, சைமண்ட்ஸ் 1-0-7-0, போலார்டு 4-0-36-1.
Leave a Reply