சென்னை: வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் நேற்று பல பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. இன்றும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில்,
தென் தமிழ்நாடு, சத்தீஷ்கார், ஆந்திரா மாநிலத்தையொட்டிய வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் ஆந்திராவின் தெற்கு கடலோரப் பகுதிகள் சிலவற்றிலும், வடக்கு கடலோர பகுதிகளில் ஒன்றிரண்டு இடங்களிலும் இடியோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்று-இடியுடன் கன மழை
தமிழகத்தில் நேற்று தென் மாவட்டங்களான மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மதுரையில் மழை கொட்டித் தீர்த்து விட்டது.
சென்னையில் இரவில் உலுக்கிய இடி – மழை
தலைநகர் சென்னையில் நேற்று இரவு பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கன மழை பெய்தது.
சுமார் ஒரு மணி நேரம் பெய்த இந்த மழை மற்றும் பலத்த காற்று, இடியால் மக்கள் பீதியடையும் அளவுக்கு இருந்தது. புறநகர்ப் பகுதிகளில் நல்ல மழை பெய்தது.
இந்த திடீர் கோடை மழை காரணமாக சென்னையில் நிலவி வந்த வெயிலின் தாக்கம் சற்று குறைநதுள்ளது. கடந்த சில நாட்களாகவே சென்னையில் மாலையில் கடல் காற்று சீக்கிரமாகவே வீசி வருவதால் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து வந்தது. நேற்று இது மேலும் குறைந்துள்ளது.
Leave a Reply