மும்பை: வீட்டுக் கடன், ஆட்டோ கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி விகிதங்கள் உயரவுள்ளன. பணவீக்கத்தைக் குறைக்க ரிசர்வ் வங்கி சில நடவடிக்கைகளை அறிவித்துள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
அதேசமயம், வங்கிகளில் சேமிப்புக் கணக்குகளை வைத்திருப்போருக்கு தற்போது வழங்கப்படும் 3.5 சதவீதம் என்ற வட்டி விகிதம், 4 சதவீதமாக உயர்த்தப்பட்டு ஆறுதல் அளிக்கப்பட்டுள்ளது.
இன்று தனது வருடாந்திர கொள்கை அறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. அதில், ரெபோ ரேட்டை 50 அடிப்படைப் புள்ளிகள் உயர்த்தி, 7.25 சதவீதமாக உயர்த்தியுள்ளது ரிசர்வ் வங்கி.
கடந்த 2010ம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள 9 வது உயர்வு இது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சுப்பாராவ் கூறுகையில், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த இது அவசியமாகிரது என்றார்.
இதேபோல குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தையும் உயர்த்தியுள்ளது ரிசர்வ் வங்கி.
Leave a Reply