பொறியியல் ரேங்க் பட்டியல் 24ம் தேதி வெளியிடப்படும் என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவஹர் தெரிவித்தார்.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவஹர் செய்தியாளர்களிடம் பேசுகையில், விண்ணப்பித்த மாணவர்களுக்கு 20ம் தேதி ரேண்டம் என் வழங்கப்படுகிறது. 24ம் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்படும்.
கவுன்சிலிங் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. மருத்துவக் கவுன்சிலிங் தொடங்கிய சில நாட்கள் கழித்து வழக்கமாக பொறியியல் கவுன்சிலிங் துவங்கும். விரைவில் பொறியியல் கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்படும்.
இந்த வருடம் விண்ணப்பிக்கும் அனைத்து மாணாக்கர்களுக்கும் பொறியியல் கல்லூரியில் சேர இடம் கிடைக்கும் என துணைவேந்தர் மன்னர் ஜவஹர் தெரிவித்தார்.
Leave a Reply