தமிழகத்தில், நேற்று முதல், மணல் குவாரி திறக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் தலையீடு காரணமாக, விலை நிர்ணயம் செய்வதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. செயற்கை தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை உயரும் அபாயம் உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவித்தவுடன், அரசு மணல் குவாரிகள் மூடப்பட்டன. ஓட்டு எண்ணிக்கை முடிந்தபின், குவாரி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. கடந்த இரண்டு மாதங்களாக, மணல் தட்டுப்பாடு அதிகரித்து, கட்டுமான தொழில் ஸ்தம்பித்தது.கட்டுமான தொழிலாளிகள், வேலையின்றி தவித்து வந்தனர். ஆறு, ஊரணி, கண்மாய்களில் கொள்ளையடிக்கப்பட்ட மணலின் ஒரு லோடு எடை, 10 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக விற்கப்பட்டது. அரசு எடுத்த முயற்சியால், நேற்று முதல், மணல் குவாரிகள் செயல்பட துவங்கின.
அரசு நிர்ணயித்த, 626 ரூபாய் கட்டணத்தை விட, கூடுதல் விலைக்கு விற்றால் தான், கட்டுப்படியாகும் என்ற ரீதியில், அரசியல்வாதிகள், மணல் விற்பனைக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளனர். இதனால், மீண்டும் செயற்கை தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது
Leave a Reply